பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

354

(இ - ள்) மூன்றில் ஒன்ருக வகுக்கப்பட்ட பித்தம் பலப்பல சிந்தனைகளை உண்டாக்கும். வாந்தி வெளிப்படும். வாயில் நீர் சுரக்கும். உடலில் எரிச்சல் ஏற்படும். நீர் வேட்கை மிகுதியாகும். விடம்போல் நா கசக்கும்.

(அ. சொ) வகுத்திடும் வெளிப்படும். மேனி - உடம்பு. பகுத்திடும் - பொருந்திடும். எரிப்பு - எரிச்சல். தவனிக்கும் . நீர் வேட்கை உண்டாகும்.

(விளக்கம்) பித்தம் மிகுதியும் ஏறப்பெற்றவர் வாய் விட்டுப் பேசுதலே நாம் காண்கிருேம். அதனுல்தான் பலப்பல சிந்தையாம் என்றனர்.

கபத்தினல் வரும் நோய்கள் 343. விடங்கிய ஐயம் மேல் இரைப் புற்றிடும்

தடங்கி இருமிடும் தனிவிலா இரண்டும்நோம் அடங்கில் சுரம்காயும் அளவற்ற கோழைர்ே இடங்கி உடல்வற்றி இரத்தமும் கக்குமே. (இ - ள்) விடத்தைப் போன்ற கபமானது மேல்மூச்சை உண்டுபண்ணும். இருமலை உண்டு பண்ணும். இருவிலா எலும்புகளை நோகச் செய்யும். சுரத்தை உண்டாக்கும். வாயில் கோழை தோன்றச் செய்யும். இதல்ை உடல் இளைக்கும்; இரத்தம் கக்க நேரிடும்.

(அ. சொ) விடங்கிய விஷத்தன்மை வாய்ந்த, ஐயம் - கபம். மேல் இரைப்பு - மேல் மூச்சு. தடங்கி - சுவாசப் பையில் தடைபட்டு. தனி - ஒப்பற்ற இடங்கி - மெலிவித்து.

(விளக்கம்) கபத்தின் கொடுமையை விளக்க விடங்கிய கபம் என்றனர். கைப்பு வெறுக்கத்தக்கது. ஆதலின் விடத்தை உவமை காட்டினர். ஐ என்பதே கபம். இதனை அம் என்னும் சாரியை சேர்த்து ஐயம் என்றனர். இரத்தமும் கக்கும் என்று உம்மை சேர்த்துக் கூறியதால் கபத்தின் கொடுமையினை நன்கு உணரலாம். ن