பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355

355

சாகும் குறியை அறியும் விதம் 349. உரைத்தது காசிக் குறுதிக் குறிகேள்

விரைத்திடப் பிங்கல விடாதோடின் மூன்றுநாள் இரைத்த சடம்ஆண்டில் எய்திடும் ஆகாசம் பரத்தில் இரண்டுகாள் பாயில்ஈர் ஆண்டெண்ணே. (இ - ள்) நாசியின் வழியாக வரும் கலைகளின் அடை யாளங்களைக் கேட்பீராக. வலப்பக்க நாசி வழியே வரும் பிங்கலைச் சுவாசம் இடைவிடாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து வலப்பக்கமே இயங்கிக் கொண்டிருந்தால், ஓர் ஆண்டில் அச்சரீரத்துக்கு மரணம் ஏற்படும் என்று அறிக. அதே பிங்கலைச் சுவாசம் இரண்டு நாள் தொடர்ந்து ஒடினல், இரண்டு வருடத்தில் மரணம் ஏற்படும் என்று அறிக.

(அ - சொ) உரைத்தது - சொன்னது. விரைத்திட - வேகமாக. பிங்கலை - வலப்பக்க நாசித் துவார வழிவரும் சுவாசம். இரைத்து - விட்ட சடம் - உடல். ஆகாசம் - மரணம். பரத்தில் - உடம்பில். பாயில் - சுவாசம் வருமானல்.

(விளக்கம்) சுவாசம் இடப்பக்க நாசியிலும் வலப்பக்க நாசி யிலும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும். வலப்பக்க நாசியில் வரின் அது பிங்க?ல எனப்படும். இடப்பக்க நாசி வழியே வரின் இடகலை எனப்படும். இவ்வாறு மாறிமாறி வராது, வலப்பக்க மாகத் தொடர்ந்து மூன்று நாட்களோ, இரண்டு நாட்களோ வரின், முறையே ஓர் ஆண்டிலும் சர் ஆண்டிலும் அவ்வுடலுக்கு இறப்பு வரும். இந்த உண்மையை அறிவிப்பது இந்த மந்திரம்.

மரணக் குறியை அறியும் விதம் 350. எண்ணி ஒருநாள் இயங்கிடில் பிங்கல

தண்ணிய மூவாண்டில் தப்பாது மரணம் ஒண்ணிய உபாயத்தில் ஓடிடில் பத்துநாள் மண்ணில் மதிஆறில் மரிப்பான் குறிஇதே,