பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

362

(அ - சொ) காயம் - உடம்பு. பாய் - பாய்தல். தீபனம் - தீவிரமான பசி. பரிந்து - தாங்கிக்கொண்டு. மாயை - பெண் மோகம். ஒய் உற்ற - அமைதியாக உள்ள.

(விளக்கம்) பசி எடுத்தபோது உண்டும், மலசலத்தை அடக்காமல் வெளிஏறச் செய்தும் வந்தால் மூலநோய் வராது. குண்டலிச் சக்தியில் வாயு புகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றேல் மூல நோய் வரும். குண்டலியாவது மூலாதாரம். பாம்பின் வடிவாய் உள்ள ஒரு சக்தி. இச் சக்தி மலவாய், ஆண்குறி ஆகிய இவ் இரண்டின் இடையே இருப்பது.

மூலநோயால் வரும் கேடுகள்

360. மூலம் எழுந்திடில் முன்னே பசிபோகும்

மூலம் எழுந்திடில் முளைவிந்து காசம்.ஆம் மூலம் எழுந்திடில் முழங்கும் இரைச்சல்தான் மூலம் எழுக்திடில் முகியாக் கழிச்சலே,

(இ - ள்) மூலநோய் வந்துற்ருல் முதலில் பசி எடுத்தல் மறையும். இந்திரிய விருத்தி ஆகாமல் கெடும். வயிற்றில் இரைச்சல் உண்டாகும். பேதியும் ஆகும்.

(அ - சொ) விந்து - இந்திரியம். முழங்கும் - குமுறும். இரைச்சல் - சத்தம். முகியா - கடைசியாக. கழிச்சல் - மலப் போக்கு.

(விளக்கம்) மூலநோய், மலத்தைப் பற்றியது. மலசலப் போக்கு இருந்தால்தான் உடல் நோய்நொடி இன்றி இருக்கும். அம்மலம் இயற்கையாகக் கழியவேண்டியது. இன்றி, மிகு கழிச்சல் ஏற்படின் துன்பந்தான். மூலநோய் உஷ்ணத்தால் இந்திரியம் நீர்த்து விடுகிறது. பசியும் குறைகிறது.