பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363

$63

மலடு ஆதற்குக் காரணம் 361. வரையான கர்ப்பத்தில் மலட்டுப் புழுவிருந்து

விரையாம்சுக்கிலத்தை விரைந்து உண்டிடும் கரையாமலடியாம் காண்அதைப் போக்கிடில் துரையான பிள்ளை சுகமாய்ச் செனிக்குமே.

(இகள் சொல்லப்படும் மாதர்களின் கர்ப்பத்தில் மலட்டுப் புழு இருந்து கொண்டு, விதையாகிய இந்திரி யத்தை உண்டுவிடும். அதனல் மாதர் மலடாகின்றனர். அப்புழுவை மருந்துகொண்டு அகற்றி விட்டால், துரை போன்ற பிள்ளை சுகமாகப் பிறக்கும்.

(அ - சொ) வரையான - சொல்லப்படுகின்ற, விரை. வித்து. சுக்கிலம் - ஆணின் இந்திரியம். கரையா - முடிவிலா.

(விளக்கம்) கரு தரித்திற்குச் சுக்கிலம் விதை ஆதலின் அதனை விரை என்றனர். மலட்டுப் புழு நீங்கும் அளவுக்கு மலடியாகவே இருத்தலின் கரையா மலடி என்றனர். துரை என்பது நல்ல தமிழ்ச்சொல்.

கர்ப்ப சன்னி வரக் காரணம்

362. பாருமே பேண்தான் பச்சுடம் பாம்காலம்

தாரும் அனுபோகம் தனிக்காடி உண்ணுதல் ஆருக்கும் மாப்பண்டம் ஆகாது மாங்கனி கோருமே கொண்டிடில் கொண்டிடும் சன்னியே.

(இ - ள்) மாதர் குழந்தையைப் பெற்றெடுத்துச் சின்னட்கள் வரை பச்சை உடம்பாக இருக்கும் நிலையில், கணவனுடன் புணர்ச்சி செய்தல் கூடாது. கூடினல் சன்னி நோய் வந்து சேரும். புளிப்பான நீர்குடித்தல், மாவில்ை ஆன பண்டங்களே உண்ணுதல், மாம்பழம் புசித்தல் ஆகிய இவற்றை மேற்கொண்டாலும், கர்ப்ப சன்னி உண்டாகும்,