பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

366

மிக்க அதன் சத்து ஆகிய இந்த நான்கையும் செந்தூரம் செய்து சாப்பிட்டால் எல்லா நோய்களும் நீங்கும் என்பதாம்.

(அ- சொ) பொடியா - நீங்கா. புகன்றிட்டர் சொன்னர். மடிவான - சுத்தமான. சூதம் - ரசம்.

(விளக்கம்) பல மருந்துகளைச் சாப்பிட்டும் நீங்காத நோய்களும் உண்டு. ஆதலின் பொடியாத நோய் என்றனர். இந்தக் கூட்டு பஸ்பம் ஒழுங்கான முறையில் இருக்க வேண்டும். அதுபோதுதான் நோய் நீங்கும். இவற்றை எல்லாம் உட்கொண்டே போற்றிடும் அபிரேகம், பொலிவான சிந்துரம் என்றனர்.

வாழ்த்து வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.

திருச்சிற்றம்பலம்

தமிழ் மந்திர உரை முற்றிற்று.