பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

5. திருமூலர் காலம்

திருமூலர் வாழ்ந்த காலம் யாது என்பதையும் ஒருவாறு உணர்தல் இன்றி அமையாதது. சுந்தரர் வாழ்ந்த காலம் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டு. அவர்தம் வாக்கில் நம்பிரான் திருமூலர் என்று திருமூலரைப் பாடிப் போற்றியுள்ளனர். ஆகவே சுந்தரருக்கு முற்பட்டவர் திருமூலர் என்பது எளிதில் புலனுகிறது. :

திருஞான சம்பந்தர் சிறுத்தொண்டரைச் சந்தித்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது. சிறுத்தொண்டரின் இயற்பெயர் "பரஞ்சோதியார்' என்பது. அப்பெயர் பெற்றிருந்தபோது முதலாம் நரசிம்மவர்ம பல்லவனது படைத்தலைவராக இருந் தார் என்றும், அதுபோது அரசாண்ட இரண்டாம் புலிகேசி யுடன் போரிட்டு வெற்றி பெற்ருர் என்றும் சேக்கிழார் கூறுவர். முதலாம் புலிகேசி பரஞ்சோதியாருடன் எதிர்த் ததைப் புலிகேசியின் வாதாபி நகரத்துக் கல்வெட்டும் சான்ருக நின்று மொழிந்து கொண்டிருக்கிறது. அப் புலி கேசியின்காலம் கி. பி. ஏழாம் நூற்ருண்டின் பிற்பகுதி என்பது வரலாற்ருசிரியர்களின் முடிந்த முடிபு. நரசிம்மவர்ம பல் லவன் மகேந்திரவர்ம பல்லவன் மகன். அம் மகேந்திரவர்ம பல்லவன் திருநாவுக்கரசர் காலத்தவன். அதாவது கி. பி. ஏழாம் நூற்ருண்டின் முற்பகுதி. அவன் காலத்தவரான திருநாவுக்கரசரைத் திருஞான சம்பந்தர் சந்தித்தார் என்று பெரிய புராணம் பேசுகிறது. இக்காரணங்களால் திருஞான சம்பந்தர் காலம் கி. பி. ஏழாம் நூற்முண்டு என்பறு உறுதி ஆகிறது.

திருஞான சம்பந்தர் திருவாவடுதுறைக்குச் சுவாமியின் வழிபாட்டிற்கு வந்திருந்தபோது, திருக்கோயிலின் பலி பீடத்தின் அருகுவணங்கி வரும்போது, "இங்குத் தமிழ்மணம்