பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46

ஈராறு கால்கொண்டு எழுந்த புரவியைப் பேராமல் கட்டிப் பெரிதுன வல்லீரேல் நீரா பிரமும் கிலம்.ஆயிரத் தாண்டும் பேராது காயம் பிரான்கக்தி ஆணை என்றும் கூறுதலே உணரவும். இப்படிப் பல மந்திரங்களைத் திருமூலர் பாடியுள்ளார். ஆகவே அவர் பல்லாயிரம் ஆண்டுகள் நிலஉலகில் வாழ்ந்தார் என்பதில் ஐயம் வேண்டா.

திருமூலர் மூவாயிரம் மந்திரங்களைச் செய்ததோடு இன்றி, முந்நூறு மந்திரம், முப்பது உபதேசம் என்னும் நூல்களைச் செய்திருப்பதாகவும் அறிகின்ருேம். இதற்குச் சான்று,

மூலன் உரைசெய்த மூவா யிரம்தமிழ் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்பது பதேசம் மூலன்உரை செய்த மூன்றும் ஒன்ருமே. என்னும் பாடல் ஆகும். இந்நூல்களோடு இன்றி, வைத்தியம் பற்றியும் ஒரு நூல் செய்துள்ளனர்.