பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49

இடபங்களே அழைத்து, அவற்றின் முதுகைத் தடவிக் கொடுத்து, அவற்றைத் தரும தேவதையாம் பெரிய நந்தியில் ஐக்கியம் ஆகுமாறு பணித்துப் பின் அப் பெரிய நந்தியை நரசிங்க மன்னனை எதிர்க்கக் கட்டளை பிறப்பித்தனள். இக் காரணங்களால் மதின்மீது நந்திகள் இல்லை என்பர்.

இத்தலத்தில் அருள்துறை என்னும் பெயரிய ஒருதிருமடம் இருந்ததாகத் தெரிகிறது: இங்கு அப்பர் பெருமாளுர் தங்கி இருந்தார் என்று புராணம் கூறும். இம் மடத்தில்தான் மாணிக்கவாசகர் தாம் பாடிய திருவாசகத்தை ஒழுங்கு முைதி) யாகக் கோவைப் படுத்தினர் என்றும் புராணம் கூறும். இங்கு மாணிக்கவாசகர்க்கு இறைவர் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் காட்டிய கோலத்தைக் காட்டினர் எனவும், இவ்வாறே சுந்தரமூர்த்தி சுவாமிகட்கும் திருவாரூர்க் காட்சி யைக் காட்டினர் என்றும் புராணம் கூறும். சுந்தரர் நண்ப ரான சேரமான் பெருமாள் நாயனர் இங்குக் சிவலிங்கத் தாபனம் செய்து பூசித்துள்ளனர். அச் சிவ்லிங்கம் சேர லிங்கம் என்னும் பெயருடன் இன்றும் இத்தவத்து வடக்குத் திக்கில் வாயு மூலையில் இருப்பதைக் கண்டு தரிசிக்கலாம். இச் சேரலிங்கத்திற்குப் பக்கத்தே சோழலிங்கம் என்ற பெயரில் ஒரு லிங்கம் உளது. அது கோச்செங்கட் சோழ மன்னளுல் பூசிக்கப் பெற்றதாகும்.

இத்தலத்தில் செம்பொன் தியாகர் வீற்றிருக்கின்ருர். அவ் விடம் நவநிதி அம்பலம் எனப்படும். இவ்வம்பலத்தின் கீழ் இறைவர் பதுமநிதி, கச்சபநிதி, மாசங்கநிதி, மாபத்மநிதி,கண்க நிதி, மகாநிதி, முகுந்தநிதி, சங்கநிதி, குந்தநிதி, ஆகிய ஒன்பது நிதி களையும் புதைத்து வைத்துள்ளார் என்பர். இதல்ை இது நவநிதி அம்பலம் ஆயிற்று. மற்றும் இத்தலத்தைப் பற்றி அறிய அவாவுவோர் துறைசைப் புராண வசனநூல் கொண்டு அறியலாம்.

இங்குள்ள விநாயகர், துணைவந்த விநாயகர்; அழகிய பிள்ளையார். இங்குள்ள இறைவர் மாசிலாமணி ஈசுவரர்.

த.-4