பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50

மூலத்தானத்தில் விளங்குபவர் முசுகுந்தச் சக்ரவர்த்திக்குத் திருவாரூர்த் தரிசனம் தந்த இறைவர். திருப்பெயர் செம்பொன் தியாகர். செம்பொன் தியாகர் சிங்காதனம் வீரசிங்காதனம். இவரது நடனம் சுந்தர நடனம். திருத்தேர் உற்சவம் இவருக்கு உரியது. இங்குள்ள இறைவியின் திருப் பெயர் ஒப்பிலாமுலை அம்மை என்பது. இங்குள்ள தீர்த்தங்கள் கோமூத்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம் என்பன. இவை முறையே திருக்கோவிலுக்கு எதிரிலும், கொங்கனேசுரர் ஆலயத்தின் பக்கலிலும், திருக்காவிரியிலும்

உள்ளன. இத்தலத்தில் தை மாதம் பெருவிழா நடக்கும். -

தைமாத பிரம்மோற்சவத் திருவிழாவின் இரண்டாம் தாள் தனிச் சிறப்புடையது. அன்று காலே இறைவருடன் திருமூலர் திருவுருவமும் எழுந்தருளும். திருமூலர் திருவுரு வத்தின் முன் ஒரு பசுவும் கன்றும் கொண்டு செல்லப்படும். சுவாமி திருமூலருடன் வீதிவலம் வந்து சந்நிதியை அடைந்த போது, திருமூலர் வரலாறு வாசிக்கப் பெறும். பின்பு பசுவுக்கும் பூசை நடைபெறும். அதன்பின் தீபாராதனை நிகழும். இக் காட்சியினை இன்றும் திருவாவடுதுறையில் காணலாம்

இத்தலம் தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்த முதல் பராந்தக சோழ மன்னனல் கற்கோயிலாகக் கட்டப் பட்டதாகும். இக் கோயிலேக் கல்லால் கட்டிய கற்சிற்பி, கற்றளிப் பிச்சை என்பவர். இவரது உருவம் இன்றும் மூலத் தானத்தின் தென்பக்கம் இறைவனைத் தொழுதவண்ணம் இருப்பதைக் காணலாம். இவருக்குக் கிழக்குப் பக்கத்தில் இவரது இளைய திருநாவுக்கரைய தொண்டர் என்பார் உருவம் உளது. இவ்வுருவங்களே அன்றி இக்கோயிலின் சிற்சில பகுதி களைச் செய்வித்தவர் உருவங்களும் உள்ளன. அவற்றைக் கல்வெட்டு வாயிலாக அறியவும்.

கல்வெட்டுகளின் மூலம் இறைவர் திருப்பெயர்கள் திருவாவடுதுறைத் தேவர். திருவாவடுதுறை ஆழ்வார்.