பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

蔷重

திருவாவடுதுறை உடையார், திருவாவடுதுறைப் பெருமான் அடிகள் என்றும், இறைவியின் திருப்பெயர் அதுலகுசநாயகி என்றும் தெரியவருகின்றன. கல்வெட்டு மூலம் பலசெய்திகள் அறிய வருகின்றன. இங்குப் புரட்டாசி மாதத்தில் ஏழு நாட்கள் திருவிழா நடந்ததாகத் தெரிகிறது. அத்திருவிழா மூல நட்சத்திரத்தில் கொடி ஏறிப் பூரட்டாதி நட்சத்தி ரத்தில் தீர்த்தம் ஆடலோடு முடிவுறும். பூரட்டாதி நட்சத் திரம் அன்று, திருமூல நாயனர் நாடகமும், ஆரியக் கூத்தும் நடத்தப்பட்டன.

முதல் குலோத்துங்கன் காலத்தில் திருநீலவிடங்கன் மடம், திருவீதி மடம், நாற்பத்தெண்ணுயிரவர் மடம் இருந்தன. இராஜேந்திரன் கல்வெட்டின் மூலம் சர்வ தேவன் திருமடம் என்னும் ஒரு மடம் இருந்ததாக அறிகிருேம். இம் மடங்களே அன்றி, விக்கிரம சோழன் காலத்தில் பெருந்திருவாட்டி அறச் சாலை, சங்கரதேவன் அறச்சாலை, முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலை என்னும் பெயரில் அறச்சாலைகள் இருந்தன. இவ்வறச்சாலைகளிலும் திருமடங்களிலும் திருவா வடுதுறை உடையார் திருநாளில் அடியார்கட்கும்,தபசிகட்கும், பிராமணர்கட்கும், அநாதைகட்கும் அமுது அளிக்கப்பட்டது. ஆனல் முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலையில் மட்டும் மருத்துவ நூல் படிப்பவர்கட்கும் இலக்கண நூல் படிப்பவர் கட்கும் உணவு அளிக்கப்பட்டு வந்தது. இதை நோக்கும்போது இக்காலத்து (College Hostel) முறை அக்காலத்தும் இருந்தது என்பதை எண்ணி மகிழ்வோமாக. ஆளுல் இக் காலத்தில் மாணவர் விடுதியில் மாணவர்களிட மிருந்து பணம் பெறுகின்றனர். அக்காலத்தில் மாணவர்கட்கு இலவசமாக உணவு கொடுக்கப்பட்டது. இங்கு நடனசாலை ஒன்று இருந்த தாகத் தெரிகிறது. அது நானவித நடனசாலை என்னும் பெயருடையது. -

திருமூலர் வரலாற்றில் சாத்தனூர் இடையனைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சாத்தனூர் திருவாவடுதுறைக்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது.