பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

荔2

இன்ஞேரன்ன சிறப்புடைய திருவாவடுதுறைக் கோயிலுக் குப் பக்கத்தே இதுபோது திருக்கயிலாய பரம்பரையைச் சார்ந்த திருமடம் ஒன்று உளது. இத்திருமடம் மானிடப் பிறவியைப் பெற்ற மக்கள் ஒவ்வொருவரும் கண்டு தரிசிக்க வேண்டிய திருமடம் ஆகும். கண்கவர்வனப்பிதான ஒவியங்கள் பல இங்குக் காட்சி அளிக்கின்றன. இது, பஞ்சாட்சர தேசிகர் ஆதீனம் எனப்படும். இங்குக் கொற்றவங்குடி உமாபதி சிவம் பூசித்து வந்த நடராசர் உருவம் பூசிக்கப்பட்டு வருகின்றது. தமசிவாய மூர்த்தியின் திருவுருவம் அமைந்த கோயில் சிறப் புடன் திகழ்கிறது. ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்தில் இங்குக் குருபூஜை பெருஞ் சிறப்புடன் நடத்தப்படுகிறது.

இத்தகைய ஆதீனத்தில் இதுபோது இருபத்தோருவது குரு மகாசந்நிதானமாக விளங்கும் ரீல பூரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருள் செங்கோல் நடத்தி வருகின்ருர்கள். நமச்சிவாய மூர்த்தியின் குருபூசைப் பெரு விழாவில் பத்து நாட்களிலும் திருமந்திர மாநாட்டை நடத்தி, திருமந்திரார்த்தங்களைத் தக்க பேரறிஞர்களைக் கொண் சொற்பொழிவு ஆற்றுமாறு செய்து, உள்ளி உள்ள எலாம் ஈயும் வள்ளியோராய் இருந்து, பொருள்தானமும் ஞானதானமும் அருள்தானமும் செய்துவருகின்ருர்கள். இவற் ருேடுதிருமந்திரத்திற்கு உரை எழுதுமாறு பணித்து, அந்நூல் கள்ே வெளியிட்டும் வருகின்ருர்கள்.

இவர் தமிழ்நாடு முழுவதும் அறச்சாலைகளை அமைத் துள்ளனர். பல்வேறு இடங்களில் திருமுறை வகுப்புக்களையும் சமய மாநாடுகளே நடத்தி வருகின்றனர். தமது திருமடத்தின் வழி வெளியாகும் நூற்களைத் தக்கார்க்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். உயர்நிலைப்பள்ளி ஒன்றும் நிறுவப்பெற்றுத் திருவிடைமருதூரில் சீரும் சிறப்புடன் பேரும் புகழுடன் நடந்து வருகின்றது. குருமகா சந்நிதானத்தின் திருவருள் காரணமாக வெளிவந்துள்ள கணபதி, முருகன் என்னும் நூல் ஒவ்வொருவர் கையகத்தும் இருக்கவேண்டியவையாகும். நடராசர் என்னும் நூல் விரைவில் வெளிவர இருக்கின்றது.