பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

10. திருமந்திரம் அமைந்துள்ள முறை

திருமந்திர நூல் பாயிரம் என்னும் ஒருதனிப் பகுதியை பும், முதல் தந்திரம், இரண்டாம் தந்திரம், மூன்ரும் தந்திரம், நான்காம் தந்திரம், ஐந்தாம் தந்திரம், ஆரும் தந்திரம், ஏழாம் தந்திரம், எட்டாம் தந்திரம், ஒன்பதாம் தந்திரம் என்று ஒன்பது பிரிவுகளையும் கொண்டுள்ளது.

பாயிரத்தில் அமைந்துள்ள தலைப்புக்கள் பதிப்புக்கள் தோறும் வேறுபட்டுள்ளன. பாயிரத்தில் உள்ள சில தலைப்புக் கள் முதல் தந்திரத்தில் அமைந்துள்ளன. முதல் தந்திரத்தில் உள்ளவை சில பாயிரத்தில் உள்ளன.

தந்திரம் என்பது ஆகமமாகும். ஆகவே ஒன்பது ஆகமங் களின் கருத்துத் திருமூலர் திருமந்திர நூலில் உள என்னலாம். அவ்வொன்பது ஆகமங்கள் : -

பெற்றதல் ஆகமம் காரணம், காமிகம், உற்றால் வீரம், உயர்சிக்தம், வாதுளம், மற்றவ் வியாமளம், ஆகும்கா லோத்தரம், துற்றகல் சுப்பிரம் சொல்லும் மகுடமே.

இவற்றுள் முதல்தந்திரம் காரணுகமத்தின் சாரத்தையும், இரண்டாம் தந்திரம் காமிகாகமத்தின் சாரத்தையும், மூன்ரும் தந்திரம் வீராகமத்தின் சாரத்தையும், நாலாம் தந்திரம் சித்தா கமத்தின் சாரத்தையும், ஐந்தாம் தந்திரம் வாதுளாகமத்தின் சாரத்தையும், ஆரும் தந்திரம் வியாமளாகமத்தின் சாரத்தை யும், ஏழாம் தந்திரம் கலோத்தராகமத்தின் சாரத்தையும், எட்டாம் தந்திரம் சுப்பிர ஆகமத்தின் சாரத்தையும், ஒன்பதாம் தந்திரம் மகுடாகமத்தின் சாரத்தையும் அறிவிக்கின்றன. இதனைப் பாயிரச் செய்யுள்,