பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57

வந்த மடம்ஏழு மன்னுஞ்சன் மார்க்கத்தின் முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம் சுந்தரன் ஆகமச் சொல்மொழிந் தானே. என்று கூறுதல் காண்க.

திருமூலர் தாம் பாடிய ஒன்பது தந்திரங்களிலும் எவ்வெவற்றைச் சுருக்கமாக விளக்கிவிட்டனர் என்பதை அவரே,

ளுேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை ஆயத்தை அச்சிவன் தன்னை அகோசர வீயத்தை முற்றும்வி ளக்கியிட் டானே. என்று கூறியுள்ளனர்.

ளுேயமாவது அறியப்படும் பொருள். ஞானமாவது அறிவு' ஞாதுருவம் என்பது அறிபவன். மாயை மாயைகள். அவை உலகத் தோற்றத்திற்கு முதற்காரணமாகிய சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என்பன. மாமாயை தன்னில் வரும்பரை என்பது சுத்தமாயையில் வசிக்கும்பரை. ஆயமாவது ஆதிசத்தி, திரோதாயிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியா சத்தி முதலான சத்திகளின் கூட்டம். சிவமாவது அப்பரம் பொருளாய சிவம். தன்னையாவது சீவான்மா. வீயமாவது பீஜாட்சரம்.

திருமந்திர நூலில் பல சக்கரங்களும், பீஜாட்சர மந்திரங் களும் கூறப்படினும், அவற்றிற்கெல்லாம் மூலமாய் வித்தாய் இருப்பது பஞ்சாட்சர மந்திரமே என்பது அறுதியிட்டு உறுதி யாகக் கூறப்பட்டுள்ளன.

முதல் தந்திரத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் ஆபலவும் கூறப்பட்டுள்ளன. இத் தந்திரத்தை உற்று நோக்கினல் திருக்குறட் கருத்துக்கள் பலவற்றை அறிந்து கொள்ளலாம். உதாரணமாகப் பிறர் மனை நயவாமை