பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64

"எல்லாரும் சிவன்என்ன கின்ருய் போற்றி

எரிசுடராய் கின்ற இறைவா போற்றி கொல்லார் மழுவாள் படையாய் போற்றி -

கொல்லும் கூற்றென்றை உதைத்தாய் போற்றி கல்லாதான் காட்சிக் கரியாய் போற்றி

கற்ருர் இடும்பை களைவாய் போற்றி வில்லால் வியன்அரணம் எய்தாய் போற்றி

வீரட்டம் காதல் விமலா போற்றி’

இது திருவீரட்டானத் திருத்தாண்டகம். இது பத்துப் போற்றித் தாண்டகப் பாடல்களே யுடையது.

'கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி

கழல்அடைந்தார் செல்லும் கதியே போற்றி அற்றவர்கட் காரமுதம் ஆணுய் போற்றி

அல்லல்அறுத் தடியேன ஆண்டாய் போற்றி மற்ருெருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி

வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி செற்றவர்தம் புரம்எரித்த சிவனே போற்றி

திருமூலத் தானனே போற்றி போற்றி"

என்பது திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகம். இதில் பத்துப் போற்றித் திருத்தாண்டகப் பாடல்கள் உண்டு.

"வேற்ருகி விண்ணுகி கின்ருய் போற்றி

மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி

ஊற்ருகி உள்ளே ஒளித்தாய் போற்றி

ஒவாத சுத்தத் தொளியே போற்றி

ஆற்ருகி அங்கே அமர்ந்தாய் போற்றி

ஆறங்கம் நால்வேதம் ஆளுய் போற்றி

காற்ருகி எங்கும் கலந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.