பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்னுரை

தமிழ் மந்திரம் என்னும் இந் நூல், திருமூலர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். சைவ மரபுப்படி திருமந்திரம் மூவாயிரம் என்பது. நம் இராமலிங்க வள்ளலார் திருமூலர் பாடியவை எண்ணுயிரம் திருமந்திரங்கள் என்று குறிப்பிடுகின்றனர். ஆணுல், இத் தொகுப்பு நூலுள் முந்நூற்று அறுபத்தைந்து திருமந்திரங்களே தொகுக்கப் பட்டுள்ளன. இங்ஙனம் 365 மந்திரங்களை மட்டும் தொகுத் திருப்பதன் கருத்து, ஆண்டு முழுதும் தினம் ஒரு மந்திரமாக ஒவ்வொருவரும் படித்து உணரவேண்டும் என்னும் நோக்கமே அன்றி வேறன்று. இவ்வாறு தினம்தினம் திருமந்திரத்தை ஒத வேண்டும் என்னும் கருத்தைத் திருமந்திரநூல் மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ், ஞாலம் அறியவே நந்தி அருளது, காலை எழுந்து கருத்தறிந்தோதிடில் ஞாலத் த"லவரை கண்ணுவர் அன்றே" என்று உணர்த்துதல் காண்க. இம்மந்திரத்தில் திருமந்திரம், மூவாயிரம் தமிழ் என்றும், சேக்கிழார் பெருமான், தமிழ் மூவாயிரம் என்றும் சுட்டி இருப்பது இந்த நூலுக்குத் தமிழ் மந்திரம் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு அரண் செய் கிறது என்பதையும், பணிவுடன் அறிவித்துக்கொள்கின்றேன்

திருமூலர் திருமந்திரம் உண்மையில் பொருள் அறிதற்குக் கடினமானதே என்ருலும், அனைத்து மந்திரங்களும் கடின மானவை என்று கூறிவிட முடியாது. எளிய மந்திரங்களும் திருமந்திரத்தில் உள்ளன. திருமந்திரம் உணர்தற்குக் கடின மானது என்று மக்கள் பயந்து ஓடாது, எளிமையான மந்திரங் களும் அத் திருமந்திர நூலில் உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்தவே, எளிதாகப் பொருளைத் தெரிந்து கொள்ளுதற் குரிய மந்திரங்களை இத்தொகுப்பு நூலில் சேர்த்துள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மந்திரம்.pdf/7&oldid=1018633" இலிருந்து மீள்விக்கப்பட்டது