பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

of

என்ற சிலப்பதிகார வரிகளைக் கொண்டு நிறுவலாம். இந்தச் சான்றுகளால் திருக்குறள் 1820 ஆண்டுகட்கு முற்பட்டது. என்பது தெளிவு. ஆகக் குறளின் காலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டுகட்கு முற்பட்டதென்க.

திருக்குறள் காலத்தை வரையறை செய்து சரித்திரச் சான்று கொண்டு நிறுவியதுபோலத் திருமந்திரம் தோன்றிய காலத்தை நிலைநாட்டல் என்பது அரியதொரு செயலாகும். ஆளுல், சிற்சில குறிப்புக்களைக் கொண்டு திருமூலர் காலத்தை ஒருவாறு குறிப்பிடலாம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது திருத்தொண்டத் தொகையில் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” என்று திருமூலரைக் குறிக்கின்ருர். சுந்தரர் இதே திருத்தொண்டத் தொகையில் கழற்சிங்கரைக் குறிக்கும்போது, கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன்" என்று குறிப்பிட்டுள் ளார். காக்கின்ற என்ற பெயரெச்சச் சொல் நிகழ் காலத்தினை காட்டுகின்றது. இதனால் சுந்தரர் காலத்திலேதான் இக் கழற்சிங்கன் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவா கின்றது. இக்கடவர்கோன் காலம் கி.பி. 840 முதல் 865 ஆகும். ஆகவே சுந்தரர் காலம் கி. பி. 9 ஆம் நூற்ருண்டென்பது புலனுகின்றது.

ஒன்பதாம் நூற்ருண்டினரான சுந்தரர் திருமூலரைக் குறிப்பிடுதலின் திருமூலர் சுந்தரருக்கு முற்பட்டவர் என்பது பெறப்படுகிறது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல் களில் திருமூலரைப் பற்றிய குறிப்பு இலது என்ருலும் அவர்கள் பாடிய பாடல்கள் பற்பல அழிந்து பட்டமையின்: அவற்றுள் ஒருவேளை இவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக் கலாம் எனக் கொள்ளின் இழுக்கு ஆகாது. சம்பந்தரும் அப்பரும் வாழ்ந்த காலம் கி. பி. 7 ஆம் நூற்ருண்டு என்பது அறிஞர் துணிவு. மகேந்திரவர்ம பல்லவன் கி. பி. 7 ஆம் நூற்ருண்டினன். இவன் காலத்தவரே அப்பர். இரண்டாம் புலிகேசியின் காலமும் ஏழாம் நூற்ருண்டு. இப்புலிகேசியை வென்றவர் சிறுத்தொண்ட நாயர்ை. இந்நாயனுர் சம்பந்தரை