பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

፳፰

வரவேற்று உபசரித்துள்ளார். ஆகவே, சம்பந்தர் அப்பர் காலம் கி. பி. 7 ஆம் நூற்ருண்டே என உறுதியுடன் கூறலாம். இச்சான்றுகள் சரித்திரச் சான்றுகள் ஆகும். (Historical evidence) இவ்விரு பெருமக்களும் கணபதியினைத் தமது பாடலில் குறிப்பிட்டுள்ளனர். திருமூலர் தம் மந்திரங்களில் எந்த இடத்திலும் பிள்ளையாரைக் குறித்து ஒரு வார்த்தைகூடக் கூறிற்றிலர். சங்க நூல்களிலும் பிள்ளையாரைப் பற்றிப்பாடல் இல்.ை ஆணுல், ஒரு சிலர் திருமூலர் திருமந்திரத்தில் ஐந்து கரத்தனே ஆனைமுகத்தன என்ற பாடல் உள்ளதே எனக் கூறலாம். அப்பாடல் திருமூலர் வாக்கன்று என்பது ஆராய்ச்சி வாளர் துணிபு. திருமூலரின் முதல்பாடல் ஒன்றவன் தானே' என்று தொடங்கும் பாடலே ஆகும். இதனை ஏன எயிறு அணித்தாரை ஒன்றவன் தானே என எடுத்து’ எனச் சேக் கிழார் செப்பும் ஆற்ருல் உணரலாம். திருஞான சம்பந்தர் திருவாவடுதுறையினை வணங்கச் சென்றபோது, பலிபீடத்தின் அருகு மலர் மணம்வீச. அதன் காரணம் என்ன எனப் பலி பீடத்தை ஆய்ந்தபோது, திருமந்திரப் பாடல்கள் இருப்பதை அறிந்தார் எனச் செவி மரபுவழி அறிந்த உண்மையாகும். இன்ளுேரன்ன காரணங்களால் கி. பி. 7 ஆம் நூற்ருண்டில் திகழ்ந்த அப்பர் சம்பந்தருக்கு முற்பட்டவர், திருமூலர் என்று கொள்ளலாம்.

மாணிக்கவாசகர் அப்பர் பெருமானுக்கு முற்பட்டவர் என்பது, அப்பர் நரியைக் குதிரை செய்வானும் என்று பாடு தல் கொண்டு தெளியலாம். இறைவன் நரியைக் குதிரை செய்தது மாணிக்கவாசகரின் பொருட்டே ஆகும். நரியைக் குதிரைப்பரியாக்கி’ என்பது திருவாதவூரர் வாக்கு; மேலும், மாணிக்கவாசகர் பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்பே இல்லை. வாதவூரர் தம் பாடல்களில் கண்ணப்ப நாயனுரை யும் சண்டேசுவர நாயனரையும் மட்டுமே குறிப்பிட்டுப் பாடி புள்ளார். திருமூலரும் விநாயகரைப் பற்றி யாதொன்றும் குறிப்பிட்டிவர். அடியார்களுள் சண்டேசுரரை மட்டும் குறிப் பிட்டுள்ளார்; இதனை,