பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

&ö

மாயேயம், என்பன. மாற்றி அருளுதலாவது, ஆணவ வலியை ஒடுக்குதலும், கன்மம் ஆன்மாவைப் பற்ருவண்ணம் தடுத் தலும். மாயையை மயக்காதபடி கெடுத்தலும் திரோதாயி யைக் கன்ம ஒப்பில் அறக் கருணையினல் சிவபெருமானை என்றும் தெரியும்படி செய்தலும், மாயேயத்தை அழித்தலும் ஆகும். தலம் களைதலாவது மண்ணுலக வாழ்வைச் சிவவுலக வாழ்வாகச் செய்தலாம். புலம் களைதல் என்பது ஆருயிரின் சிற்றறிவாகிய முனைப்புப் புலங்களை அகற்றுதல் ஆகும்.

தலங்களைதல் இன்பப்பற்றை நீக்குதல். நலம் என்பது நல்வினை. நல்வினையும் பிறவிக்கு ஏதுவாதலை, நன்கு தெளிவு படுத்தியுள்ளார். திருவள்ளுவரும். 'இருள்சேர் இருவினை என்றனர் அவர். இத்தொடருக்குப் பொருள் விளக்கவந்த பரிமேலழகர் மயக்கத்தைப் பற்றிவரும் நல்வினை, தீவினை என்று கூறியதோடன்றி, நல்வினையும் பிறத்தற்கு ஏது ஆகலான்’ என்றும் கூறிப்போந்தார். ஆகவே அதனையும் கண்ய வேண்டியது ஞானசிரியனது பொறுப்பாயிற்று. அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு வரைந்து சேரல் இறைவன் இயல்பு. ஆதலின் உள் நயந்தான் அறித்தே என்றனர். வள்ளுவரும் இதனை ஒட்டியே "மலர்மிசை ஏகினன்" என்ருர். பொது, ஈண்டுச் சிதாகாச மான பொற்சபை அஃது எல்லாச் சமயத்தவராலும் தொழு தற்குரியது. ஆதலின் பொது என்ற பெயரையே பூண்டுள்ளது.

கண்ணுதற் பரமனே ஞான குருவாக வந்து தமது இயற்கைத் திருவருளினல் ஆன்மாவைப் பக்குவப்படுத்தலைப் பற்றிப் பேசுகையில், மேலும் விளக்கமுற, -

'விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு தண்ணின்ற தாளேத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே' எனக் கூறப்பட்டுளது. கண்ணுதல் நந்தி, ஆன்மாக்களின் வினேக்கு ஈடாகத் தாம் குருமேனிதாங்கி, சிவலோகத்திருந்து