பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

84

செல்வாரைப் போலச் செல்லும்போது, அந்நிலையில், அம் மயக்க அறிவை அகற்றி நல்லறிவைத் தந்து, ஏறுதுறையாம் குறியினே அறிவிப்பவன் சிவகுரு ஆவான் என்பதாம்.

குறியினே அறிந்தபின் ஆன்மா அடையும் பேற்றைக் கூறவும் வேண்டுமோ? இதனையும் உபதேசத்தில்,

"தானே புலனைக்துக் தன்வசமாயிடும்

தானே புலனந்துத் தன்வசம் போயிடும்

தானே புலனந்துந் தன்னில் மடைமாறும்

தானே தனித்தெம் பிரான்றனைச் சந்தித்தே' என்று பாடியுள்ளனர். தன்வசமாதலாவது நம் சொற்படி கேட்கும் என்பதாம். தன்வசம் போயிடும் என்பது முன்பு இந்த ஐந்து புலன்களும் நம்மை ஆட்டிவைத்த நிலையினின்று அகன்று நிற்கும் என்பதாம். தன்னில் மடைமாறுதலாவது முன்பு பிறப்புக்கு வித்தாம் பொருள்களில் வேட்கை கொள்ளு வித்து, அதுமாறி நிலைத்த பொருளாம் திருவடியில் வேட்கை யினை விளைவிக்கும் என்பதாம். தனித்துச் சந்தித்தலாவது மும்மலங்களை நீக்கி முழுமுதலாம் மூர்த்தியினைத் தனியே சந்தித்துச் சிவபோகம் துய்த்தலாகும்.

ஆக, சீவர்களாகிய நாம் ஞானகுருவின் திருவடிகளை வணங்கி, அவன் திருமேனியைத் தரிசித்து, ஐந்தெழுத்தை ஒதவும் வேண்டும். இங்ங்ணம் செய்யின் நந்தியாம் குரு நாதனது நளின பாதம் நம் மனத்தில் பதிந்து நிற்கும். இதனை ஆசிரியர், -

'சக்திப் பதுருக்தி தன்திருத் தாளினை

சந்திப் பதுகந்தி செய்ய திருமேனி

வந்திப் பதுகந்தி காமம்என் வாய்மையால்

புந்திக்குள் நிற்பது சக்திபொற் பாதமே” என்றருளினர். இத்துணையும், குருவின் திருவருளால் அன்றிக் கிடைத்தல் அருமை என்பதைத் திருமூலர் சொரூப உதயம்' என்றவிடத்தில், அழகுற,