பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

శ్రీశ్రీ

என்று நாம் கூறவும் வேண்டுமோ? திருமன்றில் நடனத்தைக் கண்டவர் பிரிதாப்பேறு பெறுவர் என்பது உண்மை.

உலகுடன் பேசாத பெருமையாவது, சிவத்துடன் ஒன்றி அனுபவிக்கும் நிலையில், பித்த உலகருடன் பேசாத பெருநிலை சாம். இதலைன்ருே தனிமன்றில் தன்னம் தனி நித்தம்: என்ருர் திருமூலர், நித்தமாவது நிருத்தம்; அதாவது நடனம். இந்த நடன தரிசனம் ஏழு பிறவிகளையும் போக்கும்; அதாவது இவினைச் சார்ந்த வித்து, முளைக்கும் ஆற்றலை இழந்து விடுவது போல், பிறவிகளும் மேன்மேல் அங்குரியாது ஆற்றல் அற்று விடும் என்பதாம். இவ்வளவு கருத்தையும்,

"ஆமேவு பாலப் பிரிக்கின்ற அன்னம்போல்

தாமே தனிமன்றில் தன்னக் தனிகித்தக் தீமேவு பல்கர ணங்களு ளுற்றன தாமே பிறப்பெரி சேர்ந்தவித் தாமே”

என்னும் திருமந்திரப் பாடவில் காணலாம். நிருத்த தரிசனம் ஆன்மாவினுடைய பாவங்களைக் கெடுத்துப் பதிபுண்ணியத் தையே மிகுவிக்கும் ஆதலின், ஆ மேவும் பாலைப் பிரிக்கின்ற அன்னம்போல் என்ற உவமையைப் பொருத்தினர்.

இவ்வுபதேசப் பகுதியில் சிவ சித்தர்கள் சிவ யோகியர் களின் இயல்புகள் இத்தகைய எனவும் பேசப்பட்டுள்ளன.

'வெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியு மவரே சிவசித்தர் தாமே” என்பது சிவ சித்தர் இயல்பு. சிவ சித்தர் என்பதன் பொதுள், சிவயோக நெறியில் நின்று நின்று சித்தி பெற்றவர் என்பதாம். வெளியில் வெளியாய் விரவுதல், திருவருள் வெளி சிவபெருமான் வெளியின் கண் சென்று ஒடுங்குதல். அளியில் அளிபோய் அடங்குதல், சிற்றுயிர்கள் மாட்டுவைக்கும் பேரன் பாகிய உயிரளி சிவபெருமானது பெரும் பேரின்ப அளியில்