பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

శ్రీః

கண்ணே தான், சுவாநுபூதியாகிய தூக்கத்தைக் கண்டவர் ஆவர் என்பதாம். தூக்கமாவது மறைகடந்த இன்பத் துயி லாம். இந்த இன்பத் துயில்தான் தம்முள் சிவலோகம், சிவயோகம். சிவபோகம் கண்டவர் இவரே ஆவர். ஆகவே இவர்கள் துரங்கப்பெறும் நிலையினைப் பேச ஒண்ணுது என்பர்

'துரங்கிக் கண்டார்சிவ லோகமுங் தம்முள்ளே துரங்கிக் கண்டார்சிவ யோகமுங் தம்முள்ளே துங்கிக் கண்டார்சிவ போகமுங் தம்முள்ளே துரங்கிக் கண்டார் கிலே சொல்வதெவ் வாறே" என்று பாடினர் திருமூலர். இதல்ைதான் பத்தரஹகியாரும் "திங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்' என்று பாடினர்.

இந்த உபதேசப் பகுதியிலேயே, சிவயோகியர்கள் எங்ஙனம் மேலும் விளங்குவர் என்பதை முடிவுகட்டிக் கூறுகின்ருர் திருமூலர்.

'வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்

சுத்தத் துரியம் பிறந்து துடக்கற ஒத்துப் புலனுயிர் ஒன்ரு யுடம்பொடு செத்திட்டிருப்பர் சிவயோகி யார்களே” -- பிறவிக்கேதுவாகிய வினைகள் ஆன்மாவைச் சாராதவண்ணம் அருளினல் தடுத்தலே வித்தைக் கெடுத்தலாகும். இதனை ஆணவ மலத்தை அடக்கி என்று கூறினும் பொருந்தும், பின் ஐந்தெழுத்து உபதேச முறைப்படி உருவற்ற பேருறக்க மாகிய சுத்தத் துரியம் பிறக்கும். பிறக்கவே பாசப்பிணிப்பாம் பந்தம் அறும். பந்தம் அற உணர்வும் உயிரும் ஒன்றி உடம் புடன் கூடி யிருந்தும் சிவன் நினைவே அன்றி உலக நினைவு சிறிதும் இன்றி இருப்பர் சிவயோகியர் என்பதே இம்மந்திரப் பொருளாம். வியாக்கிரமாவது உபதேச மொழி.

இவ்வாறு பல்வேறு உபதேசங்களைச் செய்த திருமூலர், இப்பகுதியில் மற்றும் பல அரிய கருத்துக்களையும் அறிவுறுத்தி யிருக்கிரு.ர். அவற்றையும் சிறிது காண்போமாக,