பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

ఫ్రీ

குருவாம் நந்தி யெம்பொருமான், உடம்பாகிய கோபி லுள் குடிகொண்டு மும்மலங்களை மாற்றுகின்ருர் என்பதை

வேயி னெழுங்கனல் போலேயிம் மெய்யெனும் கோயி லிருந்து குடிகொண்ட கோனந்தி தாயினு மும்மல மாற்றித் தயாவென்னுக் தோயம தாயெழுஞ் சூரிய ளுமே”

என்று பாடியுள்ளார். இதில் பல உவமைகள் பொருந்தி நல்ல. கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதை ஊன்றி நோக்குதல் வேண்டும். குருவாம் இறைவன் உடனே வெளிப் படாது மாணவன் பக்குவம் அறிந்தபோது வெளிப்பட்டு அருளு தலின், வேயின் எழுங்கனல் போல என்ற உவமையைக் கூறினர். வேய்-மூங்கில். இதனை உட்கொண்டே அப்பர் பெருமாருைம், விறகில் தீயினன்' என்று கூறியுள்ளார்.

சூரியனே ஞானசிரியனுக்கு உவமை காட்டிய அழகு மிக மிகப் பாராட்டற் குரியதாகும். சூரியன் முன் பஞ்சு எரியுண் ணும். அது போலவே ஆசிரியனும் சூரியன் தோன்றிய அளவில் மலங்கள் அற்றுப்போகும். ஆதலின் சூரியனை உவமை காட்டினர். அடுத்தாற்போல், --

'பெருமை சிறுமை பறிக்தெம் பிரான்போல்

அருமை யெளிமை யறிந்தறி வாரார் ஒருமையு ளாமையோ லுள்ளேக் தடக்கி, இருமையுங் கேட்டிருந் தார்புரை வற்றே" என்ற திருமந்திரத்தை ஆய்வோம். இந்த மந்திரத்தில் வரும் 'ஒருமையுள் ஆமைபோல் உள் ஐந்து அடக்கி’ என்னும் அடியுடன், திருவள்ளுவர் பாடியுள்ள,

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து' என்ற குறட்பாவை நினைவுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஐந்தடக்கலாவது ஐம்புலன்கள் தம் வழி ஆன்மாவை ஈர்த்துச்