பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

క్రీడ

அந்தகனை (இயமனை)ப் போலவே கொடுமை நிறைந்து இவ் வசுரன் விளங்கினன் என்பதை ஆசிரியர் அந்தகன் தன்போல் அசுரன் என்று குறிப்பிடுவதை நாம் ஊன்றி நோக்கவேண்டும். அந்தகன் குணம் இவன்பால் அமைந்தமையினலேயே இவன் அந்தகாசுரன் என்று அழைக்கப்பட்டனன். இறைவன் அந்த அந்தகாசுரனைக் கொன்ற முறை எப்படி? எதற்காகக் கொன்ருர்? என்பனவற்றை ஈண்டுத் தெளிவாகச் சொல்லி யிருப்பதை உணர்வோமாக. இறைவனிடத்திலிருந்து பெற்ற வரங்களைக் கொண்டே உலகத்து உயிர்களுக்கு அவன் தீங்கு இழைத்தான் என்ருல், இறைவன் அவனைக் கொல்ல வேண்டியது முறையே அன்ருே? இந்த அவசரத்தில் இறைவன் கொண்ட கோலமே வயிரவமூர்த்தி, கோலம் என்க. எனவே இறைவன் வயிரவக் கோலம் கொண்டதற்கு அகச்சான்று அமைந்திருப்பதையும் நாம் அறிந்தோம்.

வயிரவர் யார் என அறிவித்த திருமூலர், அவருக்கு உரிய பணி நகர்க் காவல் புரிவதாம் என்ற குறிப்பையும் உணர்த்தி, பொது மக்களுடைய நன்மைக்காக நகர்க்காவல் பணிபுரிகின்ற வயிரவ மூர்த்தியை வணங்குவதற்கு உரிய வழியையும் இந்த வயிரவச் சக்கரம் என்கின்ற பகுதியிலே அறிவித்திருக் கின்ருர். இப்பகுதி ஆறு திருமந்திரங்களை உடையது என முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன். இவைகளைப் பற்றியெல் லாம் குருமகாசந்நிதானத்தின் அருளாணையினுல் பேச முன் வந்துள்ளேனேயன்றி, அவைகளை எல்லாம் அறிந்தவன் என்ற முனைப்பினால் அன்று என்பதையும் அறிவித்துக் கொள்ளு கின்றேன். .

வயிரவச் சக்கரம் என்று இங்கே தலைப்புக் கொடுத்திருந் தாலும், சக்கரத்தைப்பற்றிய குறிப்பு எதுவுமே ஈண்டு இல்லை என்று நான் கருதுகிறேன். நான் கூறும் இந்தக் கருத்துத் தவருகவும் இருக்கலாம். சக்கரம் இல்லாத நிலைமையில் இந்த ஆறு திருப்பாடல்களும் அடங்கிய பகுதிக்குச் சக்கரம் என்ற தலைப்பு கொடுத்திருப்பது பொருத்தமில்லையே என்று நாம்