பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஆறி இளஞ்சூடாக இருக்கும்போது வாய்வுப் பிடிப்பு உள்ள இடத்தைத் தேய்த்துத் கழுவுங்கள். பிடிப்பு உடனே விலகுவதைக் காண்பீர்கள்.

வாய்வு வலிகளுக்கு

சித்திரமூல வேரின் பட்டையில் கால் வராகன் எடை பாலில் போட்டுக் காய்ச்சி, இராக்காலத்தில் ஒருவேளை மட்டும் அருந்த வேண்டும். கீல்வலி, அண்டவலி, வாய்வு வலி முதலியவை நீங்கும். மூன்று இரவுக்குமேல் அருந்த வேண்டியதில்லை. சித்திர மூலவேரின் பட்டை கால் வராகன் எடைக்குச் சிறிதும் அதிகப்படக் கூடாது.

பத்தியம்: நல்லெண்ணையும் கடுகும்.

க்ஷயத்திற்கு

விஷ்ணுகாந்திச் செடியை அப்படியே அரைத்துப் பசும் பாலில் கலந்து கொடுத்தால், க்ஷயரோகம் விலகும். காசம் இருமல் தீரவும், கண்ணொளி உண்டாகவும். இதே மருந்துதான் காலை வேளைகளில் மட்டும் அருந்தவும்.

ஆஸ்துமாவுக்கு

ஆஸ்துமா என்ற காச நோய்க்கு, வெள்ளை எருக்கம் பூவிலுள்ள மூடு இதழ்களை விலக்கி, உள்ளே தேர் போன்ற நரம்பு ஒன்றை மட்டும் கிள்ளி எடுத்து, ஒரு நரம்பும் ஒரு கிராம்பும் ஒரு வெற்றிலையில் வைத்துக் கொடுத்து மென்று தின்னச் செய்யுங்கள். தினந்தோறும் காலையில் ஒரு வேளை. இம் மருந்து தொடக்க நோயுள்ளவர்களுக்கு முழுக் குணத்தைத் தருகிறது. நாள் மருந்து போதுமானது. அதிகமாகக் காசநோயால் கஷ்டப்படுகிறவர்கள். அப்போதைக்கப்போது சாந்தியாக, இம்மருந்தை எளிதில் கையாளலாம். ஒரேவேளை மருந்து, 5 நிமிடத்தில் குணங்காணலாம்.