பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

நரம்புத் தளர்ச்சிக்கு

விளாம் பிசினைக் கொண்டுவந்து பசும்பாலில் ஊற வைத்து, சிறிது சர்க்கரை கலந்து கொட்டைப்பாக்களவு நாள்தோறும் சாப்பிட்டு வர, பலக்குறைவு, களைப்பு, நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் விலகி, இரத்த ஒட்டமும் வலிவும் உண்டாகும்.

இரத்த வாந்திக்கு

ஆலம் விதையையும் அரசவிதையையும் அரைத்துப் பசும்பாலிற் கலந்து உட்கொண்டால் இரத்தங் கக்குதல் உடனே நிற்கும்.

மலம் கழிய

சோவிக் கீரையைக் கொண்டுவந்து இரசம் வைத்து இரவிற் குடிக்க, காலையில் கட்டு மலம் கழிந்து, உடம்பு வலி தீர்ந்து, உடல் கலகலப்பாக இருக்கும்.

கொசுத் தொல்லைக்கு

பால் சாம்பிராணி 1 1/2 பலம்
செஞ்சந்தனம் 1/2
மான்கொப்பு 1/2
சந்தனத் துாள் 1/2
வசம்பு 1/2
அதிமதுரம் 1/2
கடுகு ரோகிணி 1/2
ஜடாமஞ்சரி 1/2
கருங்குங்கிலியம் 1/2
பூண்டுத்தோல் 1/2
தேவாரம் 1/2
கோஷ்டம் 1/2

இவைகளைத் தனித்தனியாக இடித்துத் தூள் செய்து, பிறகு ஒன்றாய்க் கலந்து, தகரப் பெட்டியில்