பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 109 நாமமது கெட்டுவிட நாட்டு ിയിട് റ്റ് | r செத்து மடிந்தவர்தம் செந்நீரும், பெண்கற்பைக் கொத்துங் கழுகாலே கொட்டுகிற கண்ணிரும் ஆறாய்ப் பெருக அழுகுரலே மீதுரத் தீராப் பழியொன்றே தேடும் நவகாளி, கொண்ட மதத்தால் கொடுவிலங்கா மாறியதால்

பெண்டிர் கதறியழப் பேயாட்டம் ஆடுபவர் செய்தீமை அண்ணல் செவிபுகுதக் கண்கலங்கி, வெய்துயிர்த்து, ஆங்கே விரைந்து புறப்பட்டார். 110 கண்டோர் தடுத்தார்நம் காந்திக்குத் தீங்கெதுவும் உண்டாகும் என்றே உளந்துடித்து நின்றார்கள்: அண்ணல் தயங்கவில்லை அன்றே புறப்பட்டார்; பண்ணுங் கொடுஞ்செயலைப் பார்த்தும் பொறுத்திடவோ என்நாட்டார் கையால்இறப்பு வருமானால் முன்கூட்டிச் சென்று முடிந்து மகிழ்ந்திடுவேன் என்றுரைத்துக் கால்நோக எங்கும் நடந்தேகி நன்றுரைத்தார் அவ்வூரில் நல்லமைதி கண்டுவந்தார்: தீண்டாமை என்னுமொரு தீய பழக்கத்தை வேண்டா மெனத்தொடுத்த வீரப்போர் பற்பலவாம்: 120 ஆண்டவன் முன்னிலையில் அன்பர்கள் சென்றருளை வேண்ட நினைப்பவர்க்கு வேண்டாம் தடைஎதுவும் என்றே அறப்போரை ஏற்று நடத்தியதால் அன்றே கதவடைத்த ஆலயங்கள் தாம்திறந்த நல்லொழுக்கம் காத்து நடந்து நமைக்காத்த வள்ளலுக்கு நெஞ்சால் வணக்கஞ் செலுத்திடுவோம்; உண்மை கடவுளென ஓதி ஒழுகிவந்த அண்ணல் திருவடிக்கே அஞ்சலிகள் செய்திடுவோம்; நம்மையே உய்விக்க நாளும் உழைத்துவந்த