பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 9 தமிழ் முழக்கம் 9

பெம்மான் திருமார்பில் பேதை மனத்தேம்நாம் 130 தந்த பரிசிலென்ன? தந்தை மனம்மகிழ வந்த பரிசிலென்ன? வாயில்லை சொல்லுதற்கு ஊரெல்லாம் நாடெல்லாம் ஓவென்றலறிடவும் பாரெல்லாம், ஏங்கிடவும் பாவம் புரிந்துவிட்டோம்: வாய்மை வழிநடந்தார். வாழும் நெறிநடந்தார், தீமை தருகின்ற தீண்டாமை வேண்டாவென் றெண்ணி அதன்வண்ணம் எந்நாளும் தாம்நடந்தார், நண்ணார் தமக்கும் நலமே செயநடந்தார், இன்னா தனசெய்யா தென்றும் நடந்துவந்தார், ஒன்னார் மனமும் உருகும் படிநடந்தார், 140 அஞ்சாமை என்னும் அரிய வழிநடந்தார், எஞ்சா விடுதலைக்கே எப்பொழு தும்நடந்தார்; அண்ணல் நடந்த அடிச்சுவட்டில் நாம்நடக்க எண்ணி முனைந்தோமோ? எங்கோ நடந்துவிட்டோம்; நாட்டை மறந்தோம் நமையே நாம்நினைந்தோம்; கேட்டைப் பெருக்கினோம் கீழ்மைச் செயல்புரிந்தோம்; நாட்டை வளமாக்கும் நல்ல தொழிலாளர் பாட்டை மதித்தோமா? பாட்டாளி வாழ்வுயர ஏட்டில் எழுதிவிட்டோம் எள்ளளவும் ஏற்றமில்லை; வாட்டி வதைக்கின்றோம் வாழ்வைச் சுரண்டுகின்றோம்; 150 சாத்திரத்தின் பேர்சொல்லித் தாழ்த்திவிட்ட மக்களுக்கு ஆத்திரங்கள் தோன்றாமுன் அன்போ டவர்தமக்குக் கொட்டு முழக்கோடு கோவிற் கதவெல்லாம் தட்டித் திறந்துவிட்டோம் சாதி தொலைத்தோமா? | クー தீண்டாமை வேண்டுமெனச் செப்பித் திரிகின்ற வேண்டாத பூரிகளும் மேலோங்கிப் பேசுகின்றார்: தேர்தலிலே சாதி தெளியத் தெரியவைத்தோம் பூரி - பூரிசங்கராச்சாரி