பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறம்புமலை

எண்சீர் விருத்தம்

பாடிவருஞ் சுரும்பினங்கள் களிக்கும் வண்ணம்

பைந்தேனைச் சுரந்துட்டும் குவளைப் பூக்கள்: ஊடிவரும் மங்கையர்தம் விழிகளென்ன

ஒளிமின்னிப் பிறழ்ந்துபிறழ்ந் தலையும் மீன்கள் ஓடிவருந் தென்றலிலே புலர வைத்த

ஒள்ளியமெல் லாடையென அலைகள் செல்லும்; ஆடியவர் மனங்குளிர நலமே கூட்டும்

அரியநறுந் தண்புனல்சேர் சுனைகள் உண்டு.

வான்பொய்த்த காலத்தும் சுனையின் ஈட்டம் வற்றாத புனல்சுரந்து வளமை காட்டும்: மான்மொய்த்துத் திரிகின்ற சாரல் எல்லாம்

வளவியவேய் நெல்விளைந்து செழுமை காட்டும்: தேன்கைத்த தென்னநறுஞ் சுளைகள் நல்குந்

தீம்பலவின் பழம்முதிர்ந்து கனிவு காட்டும்; மீன்மொய்க்குஞ் சுனைகளெலாம் இறாலு டைந்து மேலிருந்து தேன்சொரிய இனிமை காட்டும்.

இறால் - தேன்கூடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/51&oldid=571657" இலிருந்து மீள்விக்கப்பட்டது