பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O * தமிழ் முழக்கம் 9

பேசுமொழி கண்டறியா முன்னர் மாந்தர்

பெருங்கிளையிற் பரணமைத்து வாழ்ந்த துண்டு;

வீசுபுயல் வேகத்துப் புரவியோடு

வினைமிக்க தேர்ப்படையும் வேந்தன்றானும்

5 IT IRL JGMT மில்லாமல் தங்கு தற்குக்

காற்றுநிழல் அத்தனையும் தந்தி ருக்கும்;

மூசுபுகழ் மூவேந்தர் தலையிற் சூடும்

மும்மலரும் தந்ததெது? மரமே யன்றோ? 12

கொஞ்சுமொழிச் செல்வத்தைத் தன்னை ஏற்றுக்

கொண்டவளைப் பஞ்சணையில் தனிக்க விட்டு, மஞ்சுதவழ் வான்மாடங் கொண்டி லங்கும்

மாமனையை நீத்தகன்று, செல்வ வாழ்வோ தஞ்சமெனத் துறந்தோடி, நாட்டு மக்கள்

தவிப்பகற்றத் துயர்துடைக்க வழியைத் தேடி, அஞ்சுபொறி காத்தவனாம் புத்தன் வந்தான்

அரசமரத் தடியில்தான் ஞானம் பெற்றான். 13

உள்ளத்தை உருகவைக்கும் வாசகத்தை

உலகுக்குச் சொன்னமணி வாசகர்க்கு வெள்ளத்துச் சடைமுடியன் ஞானம் ஒதி

விளக்கியதும் குருந்தமரத் தடியில் என்பர்; கள்ளத்தைப் பாவத்தை நீக்கும் என்றே

கைதொழுது வணங்கவரும் ஏசு தன்னை அள்ளிக்கொண் டிலங்குகின்ற சிலுவை தானும்

அம்மரத்தின் உறுப்பளித்த சலுகை யன்றோ? 14

தஞ்சம் - எளியது (அற்பமானது).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/79&oldid=571685" இலிருந்து மீள்விக்கப்பட்டது