பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 83

உருவியவாள் உறையகத்தே உறங்க வைத்தேன்;

உளத்தடத்தில் பொங்கிவரும் உணர்ச்சி ஒன்று மருவியதால் இனமறியா மகிழ்ச்சி கொண்டு

மன்னனவன் அரசிருக்கும் மன்றஞ் சென்றேன்; பெருகியதோர் அறிவொளியைத் தேக்கி வைத்த

பெருவிழியன் விரிநுதலன் என்னை நோக்கி, அருகினில்வா என்மகனே' என்று கூறி,

அகங்குளிர இருகையும் நீட்டி நின்றான். 3.

அரவணைக்க நீட்டியகை யதனுள் ஏதோ

அடங்கியுள தெனநினைந்து கூர்ந்து நோக்க, அறம்வளர்க்கும் குறளேடும். புலம்வளர்க்கும்

அழகியதொல் காப்பியமாம் ஏடும் கண்டேன்; பொரநினைந்த என்மனத்தை நொந்து கொண்டேன்;

பொன்னிவள நாட்டான்முன் மண்டி யிட்டு, நறவுகுக்கும் மலர்ப்பொழில்சூழ் நினது நாட்டை

நான்கண்டு மகிழவந்தேன் என்று ரைத்தேன். 4

என்றுமுள தென்றமிழைப்பாடிப் பாடி

இயல்தவழ்ந்து விளையாடும் நாவின் வேந்தன், நின்றளனை நகைதவழ இனிது நோக்கி

நேரியனே என்னுடன்வா எனது நாட்டில் துன்றுமெழிற் சிறப்பெல்லாம் காட்டுகின்றேன்; தோழமையால் அதுகண்டு மீண்ட பின்னர் நின்றனுயர் நாட்டினையும் அதுபோல் ஆக்க

நினைந்தெழுக' என்றுரைத்தான்; அவன்பின் சென்றேன். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/82&oldid=571688" இலிருந்து மீள்விக்கப்பட்டது