பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 * தமிழ் முழக்கம் 9

செந்தமிழின் பாட்டரசன் கம்ப நாடன்

செங்கோன்மை செலுத்திவரும் நாட்டில் வாழ்வோர் சிந்தைகொளும் மகிழ்ச்சியினால் சிரித்துப் பேசிச் சிந்துகிற கண்ணிரே அங்குக் கண்டேன்; வெந்துழல்வோர் திரண்டெழுந்து நீதி கேட்க

வெகுண்டரசு தாக்கியதால் அவர்தம் மெய்கள் சிந்துகிற குருதியிலே தோய்த்தெடுத்துச்

செங்கோலாக் காட்டுகிற கோன்மை காணேன். 6

வயலொன்றைக் காத்துவரும் உழவன் போல

வையமெலாம் காக்கின்ற கோன்மை கண்டேன்; உயிரொன்றி வாழ்கின்ற உடம்பாய் நின்றே

உயிரனைத்துங் காக்கின்ற கோன்மை கண்டேன்; செயிரின்றி இயல்பினிலே ஒருமைப் பாடு

செழித்துயரச் செய்கின்ற கோன்மை கண்டேன்; கயலொன்றும் விழிமடவார் கற்பைக் காக்கும்

கருத்தேபோல் நிலங்காக்குங் கோன்மை கண்டேன். 7

கலைதெரியும் மண்டபங்கள் அங்குக் கண்டேன்

கல்லெறியும் மண்டபங்கள் அங்கே இல்லை; விலையறியாக் கல்விதனை விரும்பிக் கற்று

வீறுபெறும் மாணாக்கர் குழுவைக் கண்டேன்; நிலையறிய மாட்டாமல் மயங்கி, வேலை

நிறுத்தங்கள் செய்வோரைக் கண்டே னல்லேன்; அலைதவழும் கடலொலிபோல் ஆர்ப்பாரில்லை

அமைதியுடன் சுவடிகளே பார்ப்பாருண்டு. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/83&oldid=571689" இலிருந்து மீள்விக்கப்பட்டது