பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வல்லிக்கண்ணன்

"நற்பா டலிபுரத்து நாதனே நாயினேன்
பொற்பாம் நினதடிையப் போற்றினேன் - தற்போது
வேண்டுஞ் செலவிற்கு வெண்பொற்கா சு பத்து
ஈண்டு தருக இசைந்து"

என்ற தான் புனைந்ததோர் வெண்பாவை எழுதி வைத்து விட்டுச் சென்றார். அடுத்த நாள் வழக்கம் போல வந்து நோட்டைப் பிரித்துப் பார்க்க, அந்தப் பாட்டெழுதியிருந்த பக்க அடையாளம் போல, பத்து ரூபாய் நோட்டு ஒன்றையும் உடன் வைத்திருந்ததைக் கண்டார். உடனே சுவாமிகளின் முகத்தைப் பார்த்து நான் பாட்டுக்கு (என் மனம் போனவாறே) எழுதி வைத் திருந்தேனே யல்லாது உண்மையிற் பணம் பெறவேண்டுமென்று இப்பாட்டினை எழுதி வைக்கவில்லை’ என்றார். அதற்குச் சுவாமிகள், நான் பாட்டுக் குத்தான் (பாடலுக்காகத்தான்) பொருள் கொடுத்தேனே யல்லாமல் வேறொன்றற்காகவுமில்ல’ என்று சிலேடையாகப் பொருள் கொள்ளுமாறு சொன்னார்கள். அந்தப் பொருள் பொதிந்த விடையினால் ஆசிரியர் பெரு மகிழ்ச்சி கொண்டு அப்பொருளை யேற்றுக் கொண்டார்.

ஆசியருக்கு நன்றி : சி.மு. சுவாமிநாத அய்யர் தம் உத்தம சீடராகிய சுவாமிகளுக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு போதித்தார். சுவாமிகள், தாம் பட்டமேற்றுக் கொண்ட எட்டாண்டுகளுக்குள் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தைத் தேடி அச்சிடு வித்தார்கள். கிடைத்தது ஒரே ஒலைச் சுவடிப்பிரதி, அது கிடைத்த விவர முதலியவற்றை, அவர்கள் அந்நூலின் முகவுரையில் அறிவித் திருக்கிறார்கள். அஃதாவது , “... பற்பல விடங்களில் விசாரித்தும் புத்தகங் கிடைக்காமற் போன நாள் பல, பின்பு திருவாவடு துறை யாதீனத்திலிருந்து கூடலூர் டவுன் காலேஜ் தமிழ்ப் பண்டிதரவர்களாகிய சிதம்பரம் மகாராஜ ராஜஸ்ரீ மு. சாமிநாதை யரவர்களாற் கிடைத்த பிரதியு மொன்றே. அதுவும் பழைமையுஞ் சிதைவையும் மேவியது...

இப் புத்தகத்திலுள்ள சிவ சரித்திர முழுமையும் பலரும் எளிதில் படித்துணரும் பொருட்டுப் பொழிப்புரை போன்ற ஒரு வசனம் எனது தமிழாசிரியரும், யான் திருத்திய காலத்து நிரம்ப உதவி செய்தவர்களும், கூடலூர் டவுன் காலேஜ் தமிழ்ப் பண்டிதவர்களுமாகிய சிதம்பரம் மகா ராஜ ராஜஸ்ரீ மு. சாமிநாதையரவர்களால் இயற்றுவித்து இத்துடன் சேர்த்தச்-