பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வல்லிக்கண்ணன்

புதுவையிற் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் இருபத்திரண்டாம் ஆண்டு விழா சிறப்புற நடைபெற்ற காலத்திலும் சுவாமிகள் எழுந்தருளித் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்கள். அக்காலை, கிரந்தே. சிவசங்கர செட்டியார், பூரணாங்குப்பம் முனிசாமிப் பிள்ளை முதலிய அன்பர்கள் தக்க உதவிகள் செய்து சமாஜக் கூட்டம் சிறப்புற நடத்தி வைத்தார்கள். அது 1927 டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்ததாகும்.

புதுச்சேரி அம்பலத்தாடும் சுவாமிகள் மடாலயத்திற்கு 1927 டிசம்பர் மாதத்தில் எழுந்தருளி, ஸ்ரீ அம்பலவரையும் அவரால் எழுதப்பெற்ற திருவாசக ஏடுகளையும் தரிசித்து அக்காலை மடத்தின் அதிபராக எழுந்தருளியிருந்த சுவாமிகளோடு அளவளாவி மகிழ்ந்தருளியதும் உண்டு. அம்மடத்தில் செய்யத்தக்க சில சீர்திருத்தங்களையும் அருளினார்கள்.

புதுவைக் கலைமகள் கழக ஆண்டு விழாக்கள் பலமுறை நடைபெற்றதுண்டு. அவ்வப்போது, சுவாமிகள் எழுந்தருளித் தலைமை யேற்று விழாவினைச் சிறப்பிப்பதும், விரும்பியழைக்கும் பல இடங்களுக்கும், சபைகளுக்கும் எழுந்தருளிச் சிறப்பிப்பதும் உண்டு.

புதுவையில் செந்தமிழ்ப் பிரகாச சபை என்ற ஓர் சபையும் நடைபெற்றது. அது பழநிசாமி முதலியார், முருகசாமிப்பிள்ளை முதலாம் அன்பர்களின் ஆதரவு பெற்றது. அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அச்சபை விழாக்களுக்கும் சுவாமிகள் எழுந்தருள்வது உண்டு.

புதுவைச் செங்குந்த அன்பர்கள், சுவாமிகளின் சொல்லமுதை மாந்திப் பெரு மகிழ்வெய்தினர். அவர்களது தொண்டு சிறக்கத் தாமும் பற்பல சங்கங்களில் ஈடுபட்டனர். யாவரையும் சிறந்த மொழிப் பற்று - சமயப் பற்றுகளில் ஈடுபடுத்தவும் செய்தனர். தமது நன்றியறிதலைச் சுவாமிகள் பால் எங்ஙனம் செலுத்துவதென ஆராய்ந்தனர். சுவாமிகளின் உபாசனா மூர்த்தியாக உடன் எழுந்தருளும் ஸ்ரீ வல்லி தேவசேனா சமேத சுப்பிரமணிய மூர்த்திக்கு ஒரு வெள்ளித் திருவாசிகை செய்து அளித்தனர். அஃது இன்றும் திருமடாலயத்தில் பயன்படுத்தப் பெற்று வருகிறது. -

காஞ்சீபுரத்துடன் தொடர்பு : காஞ்சீபுரத்தில் இன்றும் வசித்து வரும் திரு. சிவஸ்வாமி தேசிகரவர்கள், சுவாமிகளின் சீடர்களுள் ஒருவர். தமிழ் - வட மொழிகளைச் சுவாமிகளிடம்