பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

வல்லிக்கண்ணன்

கொடுத்தவர்கள். அவர்களுள் தஞ்சைக் கருந்தட்டாங்குடியில் வாழ்ந்த வழக்கறிஞர் த. வே. உமா மகேசுவரம் பிள்ளை, B.A., B.L.அவர்களும் ஒருவர். அவர் பின்னர்தஞ்சை மாவட்டக் கழக (Thanjavur Dt. Board)த் துணைத் தலைவராகி யிருந்தார். அவ்வடமொழிக் கல்லூரி, அக்கழக ஆட்சிக்குட்பட்டதாயிருந்தது த.வே. உமாமகேசுவரம் பிள்ளையைத் தம் மடாலயத்திற் கழைத்து, அக் கல்லூரி நடைபெறுவதற்கு அளிக்கப் பெற்ற மானிய முதலியவற்றிற்கென எழுந்த அறக் கட்டளையைப் பரிசோதிக்குமாறு ஆலோசனை கூறினார்கள். அவர், தலைவராக இருந்த சர் AT. பன்னீர் செல்வம், Bar-at-law வுடன் கலந்து பழைய செப்புப் பட்டயத்தைப் பரிசோதித்துப் படியெடுத்துக் கொண்டு தலைவருடன் மடாலயத்திற்கு வந்தார். சுவாமிகள் அவ்விருவருக்கும் தக்க உபசாரம் புரிந்து அளவளாவினார்கள். தமிழுக்கு அந்த அறக் கட்டளை உதவி செய்யத் தடை ஏதுமில்லாதவாறு, பொதுவாகக் கல்விக்கே என எழுதப் பெற்றிருந்தது. எனவே, அக் கல்லூரியில் தமிழும் பயிற்றுவிக்க வழிசெய்வது தமிழராம் நமது கடன் என அவர்களுக்கு அறிவுறுத்தி விடையளித்தார்கள். அவர்கள் தஞ்சை சென்று அடுத்த ஆண்டிலேயே அக் கல்லூரியில் தமிழ் பயில்வதற்கெனப் பத்து மாணவர்க்கு இடம் ஒதுக்கினார்கள். படிப்படியே பாதி தமிழ்க்கல்வி பயிலும் மாணவரும் பாதி வடமொழிக் கல்வி பயில் வோருமாக மாற்றப்பெற்றது. வடமொழிக் கல்லூரி என இருந்த அது அரசுக் கல்லூரி எனப் பெயரும் மாற்றப் பெற்றது. திரு. த. வே. உமா மகேசுவரம் பிள்ளையர்கள் தமிழ் மொழிக் கல்விக்கு ஆக்கந்தேடித் தந்ததும், அவரது நன் முயற்சியால் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நல்ல பணிகளைப்புரிவதும் சுவாமிகளுக்கு மிக்க மகிழ்ச் சியளித்தன. அதனால் தமக்கு அறுபானாண்டு நிறைவு விழா நடைபெற்ற பேரவையில் 1933ல் அவருக்குச் செந்தமிழ் புரவலர் என்ற சீரிய பட்டத்தினை அளித்துச் சிறப்பித்தார்கள்.

கரந்தைப் புலவர் கல்லூரி :

முன் கூறப்பெற்ற த.வே. உமா மகேசுவரம் பிள்ளையவர்கள், தமிழ்ப் பற்று மிக்கவர். அவர் தன் முயற்சியால் கரந்தைத் தமிழ்ச் சங்கம் 1911ல் சாதாரண வைகாசி மாதத்தில் தோற்றுவித்தவர். அதனைப் பல முயற்சிகளுடன் திறம்பட நடத்தியவர். அத்தமிழ்ச் சங்கத்தின் ஏழாம், எட்டாம் ஆண்டு