பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

145

சென்று, தனக்குப் பெரிய சுவாமிகளின் தரிசனம் கிடைக்க வில்லை யென்றும், ஒரு சாமியார் போலக்காணப் பெற்றவர் சில பாட்டுகளை விளக்கிப் பொருள்கூறி, நாளை வரச்சொன்னதாகவுங் கூறினார். அவருக்கு, மடாலயத்தோடு நீண்ட நாட்களாகத் தொடர்பு உண்டு. எனவே, அவர் அடையாளங்களைக் கேட்டறிந்து, பாடம் நடத்திய அவர்களேதான் அம்மடாலயத் தலைவர் களாவர்களெனவும், எளிய காட்சியும் எளிமையாகப் பழகுதலும், கால முதலியன பாராமல் பாடம் போதிப்பார்களெனவுங் கூறி, அடுத்த நாளும் குறிப்பிட்ட வேளையிற் சென்று பாடங் கேட்டுப் பயன் பெறுமாறு ஆலோசனையுங் கூறினார். அடுத்த நாள் வந்த அந்த வாலிபர், அடிகளாரைக் கண்டவுடன் கண்ணிர் சோர அழுது நீங்கள்தானா இம்மடால யத்தின் தலைவர்? பலவாறு தம்மை அலங்கரித்துக்கொண்டும், பல ஆபரணங்களைப் புனைந்து கொண்டுமல்லவோ இருப்பார்கள் மடாதிபதிகள் நீங்கள் இவ்வளவு எளியராக இருக்கிறீர்கள் எனக்கூறி விம்மி விம்மி ஆனந்த வெள்ளத்தில் நீந்தினார். சுவாமிகள் அவருக்கு ஆறுதல் கூறி இருக்கச்செய்து, மேலும் பாடம் நடத்தியருளினார்கள். அவர் குறிப்பிட்ட வேளைகளில் வந்து கற்றுப்பின் தேர்வெழுதி நூற்றுக்கு எண்பது மதிப்பெண் பெற்றுத் தேறினார். கடலூர்(மஞ்சக் குப்பம்) ஸெயின்ட் ஜோஸப்ஸ் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்த திரு. திருஞானசம்பந்தம் பிள்ளையவர்கள். இந் நிகழ்ச்சி யினைக் கூறியவர்.

இங்ஙனம், தம் பேரருளினை எத்தகையார் மாட்டும் வேறுபாடில்லாது செலுத்தும் சுவாமிகளிடம் பெரிதும் ஈடுபாடு கொண்டோருள், திரு வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள். ச. சச்சிதாநந்தம் பிள்ளை, B.A. LT., அவர்கள். மணிமங்கலம் திரு திருநாவுக்கரசு முதலியாரவர்கள், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரவர்கள், மறைமலையடிகளார், தாகூர் சட்ட விரிவுரையாளர் திரு கா. சுப்பிரமணிய பிள்ளை, M.A., M.L., அவர்கள், ரசிகமணி T.K. சிதம்பரநாத முதலியாரவர்கள். திரு. ந. மு. வெங்கடசாமி நாட்டாரவர்கள், திரு உலகநாதம் பிள்ளையவர்கள், கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளையவர்கள் முதலாயினரைக் குறிப்பிடலாம்.

நீதிபதி இராமேசம் அவர்கள், டிஸ் டிரிக்ட் முன்லீப் J.M. நல்லசாமிப் பிள்ளையவர்கள், Sir A இராமசாமி முதலியாரவர்கள், டிப்டி கலெக்டர் போதண்டபாணிப் பிள்ளையவர்கள்,