பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

வல்லிக்கண்ணன்

4. ஞானதேசிக மாலை :

மடாலயத்தின் இரண்டாம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளின் ஆலயம் திருப்பணி நிறைவேற்றிக் கும்பாபிஷேகம் செய்வித்த போது, தாம் இயற்றிய ஞானதேசிக மாலையை அச்சிடுவித்து யாவர்க்கும் வழங்கச் செய்தார்கள்.

5. அவிநாசி நாதர் தோத்திரக் கொத்து :

1939-ல் பொன் விழா நடைபெற்றபோது வெளியிடப் பெற்றது. அதில் அடங்கிய சிகாமணிப் பதிகம் மட்டும் திருக்கோவலூர் ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்களாலும் அச்சிடுவித்தது உண்டு.

6. கந்தர்சட்டிச் சொற்பொழிவு :

இது அடிகளின் சொற்பொழிவுகள் சில. பேராசிரியர் முத்து இராசாக்கண்ணனார் குறிப்பெடுத்து எழுதியது.

இன்னும் சில பண்புகள்

இதுவரை எழுதப்பெற்றவை யெல்லாம் சுவாமிகளுடைய பெருமைகளுள் ஒரு சில பகுதிகளேயெனலாம். எந்த இடத்தில், எந்த நேரத்தில், எத்தகையார் வரினும் அவர் வேண்டிய நூல்களிற் பாடம் போதித்தல் ஒரு தனிப் பண்பாடு, அதிலும், அவர்கள் புத்தகம் எதனையும் பிரித்து வைத்துக் கொள்ளாமல், கேட்க வந்தோரையே பாட்டைப் படிக்கச் செய்து, வழக்கம் போலப் பயனிலையை முன் கூறிப்பின்னர் முறை முறையே கூறி, வந்தவர் ஐயமின்றிப் பொருள் விளங்கிக் கொள்ளும் அளவும் போதிப்பதைக் கேட்டோர் பலரும் வியந்து போற்றுவர். எழுதியும் உளர்.

இங்ஙனமே சிற்சில ஐயங்களைத் தெளிவித்தலும் சிறப்பு :

மடாலய மரியாதைகள் பல. பல்லக்கு, மேனா, குடை, கொடி சாமரை, தீவர்த்தி முதலியவை முதற்சுவாமிகளுக்கு ஆற்காட்டு நவாப்பினால் அளிக்கப் பெற்றவை. நம் சுவாமிகள் அவற்றை ஆடம்பரம் கூடாதென்றோ - ஏனோ நிறுத்தி விட்டார்கள். திருச்சின்னமுங் கூடத் தென்னாட்டு யாத்திரைக்குப் பின் பயன்படுத்த பெறவில்லை. உறுதி மொழிபற்றி மேனா இவர்தலை மட்டும் கைவிடவில்லை.

விசய தசமியன்றும், மாட்டுப் பொங்கலன்றும் திருக்கோயில் இறைவன் எழுந்தருள்வதுண்டு. மடாலய முகப்பில் வரும் போது வழக்கம் போல் தரிசித்துவிட்டுச்