பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

171

சென்று, முதற் சுவாமிகள் அணிந்து கொண்டிருந்த, தலை மாலை, மார்பு மாலைகளாம் சில கோவை களை யணிந்து பூசனை புரிந்துவிட்டுக் கொலு விருப்பார்கள். அடியார்கள் வணங்கத் திருநீறளித்தபின் அவைகளைக் களைந்து எப்போதும் போலவே இருப்பார்கள்.

விலை மதிப்புமிக்க ஆடைகளையோ, ஆபரணங்களையோ அணிவதில் ஒருபோதும் விருப்பம் கொள்ளார்கள்.

தொடக்க காலத்தில் முருகேச நகர், ப. க. பழநியாண்டி முதலியாரும், வெ. க. மாணிக்க முதலியாரும் விரும்பிச்செய்து அணிவித்த தங்கச் செச்சை மட்டும் மார்பகத்தில் விளங்கிக் கொண்டிருக்கும்.

தரிசிக்கவரும்.அன்பர்கள் கையுறையாகக் கொண்டு வரும் பழம் முதலிய பொருள்கள் யாவர்க்கும் வழங்கப் பெறும். கொண்டு வந்தோர்க்கும் பிரசாதமாகச் சில அளிக்கப்பெறும்.

யாவரும் தமிழ் மொழியினைத் திருத்தமுறப் பேச வேண்டுமென்பது சுவாமிகள் அடங்கா ஆர்வம். தாமும் ஒரு சிறு கொச்சைச் சொல்லும் பயன்படுத்த மாட்டார்கள். பழகுவோர், மாணவர் முதலாயினோர் யாவரும் அவ்வண்ணமே பேசுவரேயன்றி ஒரு சிறிதளவும் மாறாதவாறு தம்மைத் தாமே கவனித்துக் கொள்வார்கள்.

ஆண்டவனுக்கு இயன்ற அளவு நிறையப் பொருள்களை அபிஷேகிக்க அவாவுவது அவர்கள் இயல்பு. சிறப்புக்காலங்களில் அங்ஙனமே செய்வார்கள்.

ஏதொன்றையும் கணக்குப் பார்த்தே செலவிடுவார்கள். வீண் செலவுகள், ஆடம்பரங்கள் அவர்களுக்குப் பிடியாதன.

நோயுற்றோரும், சில முறையான விருப்பங்கொள்வோரும் சுவாமிகள் திருக்கைத் திருநீறு பெற்றுச் சிறந்தாராவர். புதுவண்டிப்பாளையம் அ. வேங்கடாசல முதலியாரவர்கள், கண்ணொளி மங்கியபின், நாள்தோறும் சுவாமிகளை வந்து தரிசித்தும், குருமூர்த்திகளின் ஆலய தரிசனம் செய்தும் முற்றும் நலம் பெற்றுத் திகழ்ந்தனர்.

மாணவர்

முன்னரே குறிப்பிட்டவாறு சுவாமிகள எப்பாலவரையும் மாணவராக எற்றார்கள். அறிந்தவரை சிலரை இங்குக் குறிப்பாம்: திரு. ம. ரா. குமாரசாமிப்பிள்ளை - இவரே சுவாமிகளின் புகழைப் பரப்பியவர். 1929ல் சுவாமிகள் ஆரணி