பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

175

மார்கழி மாதம் சிறப்புடைய மாதம். அம் மாதத்தில் இந்துக்கள் யாவரும் ஆன்றோர் கடைப்பிடித்தவாறே பூசை, பாராயண முதலியவற்றை மேற்கொள்ள வேண்டுமென்பதை வற்புறுத்துவார்கள். சொல்லி விட்டால் போதுமா? தாமே அதற்குத் தூண்டுகோலாக இருக்க வேண்டுமெனக் கருதினார்கள். 1934ஆம் ஆண்டு முதல், மார்கழி மாத முழுவதும் காலை 6.00 மணிக்குச் சொற்பொழிவு தொடங்கி விடுவார்கள். மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல் பற்பல அன்பர்கள் வந்து கேட்டு மகிழ்வர். இவ்வாறு சுவாமிகள் ஒவ்வோராண்டும், தாம் எழுந்தருளும் இடங்களிலும் பணியாற்றுவார்கள். ஒவ்வொரு நாளும் - சைவத் தொடர்பான பாட்டு ஒன்று, வைணவத் தொடர்பான பாட்டு ஒன்று - ஆக இரு பாட்டுகளே விரித்துரைக்கப் பெறும். திருப்பள்ளி யெழுச்சி 10, திருவெம்பாவை 20, ஆக 30ம், திருப் பாவை 30ம் ஆக இருப்பதால் ஒரு மாதம் அவைவிரித் துரைக்கப் பெறும். தை விஷு புண்ணிய நாளில் நிறைவு விழா நடைபெறும்.

இதுவே, பாவை மாநாடுகள் நடைபெறுதற்கு அடிப் படையாய் அமைந்தது.

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் இந்நிலவுலகில் ஆற்றிய தொண்டுகள், இனி அவர் மரபினராலும், மாணவர்களாலும் ஆற்றப் பெறல் வேண்டுமென இறைவன் எண்ணியதன் பயனோ-ஏதோ ஒரு சில மாங்களுக்குள் பற்பல பணிகளையேற்றுக் கொண்டு, ஏற்றவற்றைக் காலங்கடவாமல் நிறைவேற்றிக் கொண்டு எழுந்தருளினார்கள்.

திருச்சிராப்பள்ளியில் சைவ சித்தாந்த மகா சமாஜ முப்பத்தாறாம் ஆண்டுவிழாவின் மூன்று நாள்தலைமை யேற்றருளிய பின், தைப் பூச நன்னாளில் பழநிப் பண்ணவனைப் பரவத் திருவுளங்கொண்டருளி வழிக்கொண்டார்கள். அங்ஙனமே சில நாள் கண்டு கண்டு, உருகி உருகி, அவனைத் திருவுள்ளத்தில் கொலு வீற்றிருக்குமாறு செய்து கொண்டார்கள். 31-1-1942 மாலை அவனருள் வலத்தால் தெய்வத் திருவாக்காகச் சுவாமிகள் திருவாயமுதம் ‘சிவராஜ யோகம்' என்ற தலைப்பில் எழுந்தது. இந்த வேண்டுகோள், பழநியிற் பரமகுருவின் பாததாமரையல்லாது வேறு பற்றில்லையெனத் தாமும் உணர்ந்து, மன்பதைகட்கும் உணர்த்தி உலாவிக் கொண்டிருந்த ஸ்ரீசாது சுவாமிகளுடையது. சொற்பொழிவு முடித்துக் கொண்ட பின், வெள்ளி இரதக் காட்சி, அதன் பின்