பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

வல்லிக்கண்ணன்

மலையேறி ஆண்டவனுடைய அர்த்த ஜாம தரிசனம், எழுந்தருளியிருந்த சிவகங்கை ஜமீன் தாரவர்களின் விடுதிக்கு மீளும் போது இரவு 12 மணிக்கு மேலாகி விட்டது.

அதிகாலை 3 மணிக்குப் பயணமெனக் குறிப்பிட்ட நேரத்திற் புறப்பாடு. நீ வந்த வேலைகளை முடித்துக் கொண்டு விட்டாயா? புறப்படு, புறப்படு. என்னைவிட்டு எங்கே புறப்பாடு? என்று ஆண்டவன் கூறிய குரல் உள் அந்தரங்கத்தில். 'ஆம் க. அரங்கசாமி முதலியார் மகள் திருமணம்! காமாட்சி திருமணம் முன்னரே கட்டுரை எழுதிக் கொடுத்து அச்சாகிவிட்டதே! அந்தத் திருமணத்தை நடத்தி வைக்க ஒப்புக் கொண்டவாறு செல்ல வேண்டாமோ? அடிகளார்வினா. 'செல்வதா? போதும் போதும் சென்று, சென்று திக்கெட்டும் தமிழ் பரப்பியது போதும் இனி உன் அன்பர்கள் அப்பணியை ஈடேற்றுவர். இனி தமிழ் - அதுதான் அமிழ்து அரியணை ஏறும். போதும் நீ அலைப் புண்டது' இது ஆண்டவன் கட்டளையாயிற்று.

ஒப்புக் கொண்டால் அதை எந்த உடல் நலக்கேடு தடுத்தாலும், பிற எந்த இடையூறு நேர்ந்தாலும் உறுதியுடன் பணியாற்றும் திருமேனி! இனித் தாங்காது எனப் பழநியாண்டவன் நினைத்தான். அந்த உள்ளததிலும் ஓர் கலக்கம் உறுதி வென்றது. மேனாவில் எழுந்தருளினர். வழக்கம் போல் சண்முகா சண்முகா தான். அவனையன்றி இப் பூதவுடலுக்கு இயக்கம் ஏது? 8 மைல் விஷு (விஷமே தான் மற்றை யோர்க்கு, அண்ணலுக்கு அதுவே அமுதம்)ஆண்டு, தைப்பூசம் (31-1-1942) பொழுது புலரவில்லை.

கலங்கினர் போகிகள் - திருக்கோவலூர் மடாலய பூசகர், சொக்கலிங்க அய்யர் ஆகியோரைப் பார்த்து, 'ஏன் கலக்கம்? முருகன் திருவருள் இங்ஙனமாயின் அதற்கு நாம் என்ன செய்யக்கூடும்?’ என்ற ஆறுதல் மொழிகள்.

காலைக் கடன்கள், உடல் நலமில்லையென்று திரு. அரங்கசாமி முதலியாருக்கு அறிவியுங்கள் எனத் திருவாக்கு எழுந்தது, ஒரு வாய் வெந்நீர் அருந்தினார்கள். அடுத்த வாய் உள்ளே இறங்கவில்லை. திருவருள் தடுத்தாண்டு தன் திருவடிகளில் அணைத்துக் கொண்டுவிட்டது.

முதற் குருநாதர், ‘பரமென விளங்கும் புதல்வன்’ எனப் பழநியாண்டவனால் அவரது முன்னோர்க்கு அருளிச் செய்யப் பெற்றதன்றோ? அந்த முதற் குருநாதரே தான், சீர் கெட்டிருந்த