பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

வல்லிகண்ணன்

தண்ணீர் வேண்டும். சீவகாருண்யம் உடைய இறைவேண்டும் உயிர்க்கு அறியாமையைப் போக்கவும் அறிவை விளக்கவும் இன்றிய மையாது இறைவேண்டும்.

ஒருவர்க்குக் குற்றும் ஆற்றலிருப்பினும்குற்றுந் தொழில் நிகழ்ந்தபோதே நெல்லுக்கு உமி போதலும் வெண்ணிறம் விளங்குதலும் நேரும். இறை தொழில் செய்தபொழுதே உயிரின் அறியாமை நீங்குதலும் அறிவு விளங்குதலும் ஆம். உருவமின்றி அறிவோடு கூடிய தொழில் நிகழாது. உருவம் வந்தபோது பெயர் வரும். எனவே, உரு, பெயர், தொழில் இம் மூன்றும் இறைக்கு இருப்பின் உயிர்க்கு அறியாமை நீங்கும்; அறிவு விளங்கும். இறையோ உருவொடு பெயர்தொழில் ஒன்றும் இலான். என் செய்வது உயிர்கள்? இந்நிலையில் இறை காரணம் பற்றாக் கருணையினால் உரு பெயர் தொழில் ஆம் இவைகளை மேற்கொள்ளுகின்றது. இறை உயிர்களின் நலம் பொருட்டுக் கொள்ளும் உருவமும் நிலையியலுருவமும் இயங்கியலுருவமும் என இரண்டு வகையாம். ஒன்று இருந்து நலஞ்செய; மற்றொன்று சென்று நலம் செய. இருந்து நலஞ்செயும் உருவம் இலிங்கம் முதலிய. சென்று நலஞ்செயும் இயங்கியல் உருவமும் குரு சங்கமம் என இரண்டு வகையாம். குரு வடிவம் தானல்லாத உடலைத் தானெனும் அகங்காரத்தைப் போக்க; சங்கம வடிவம் தனதல்லாத பொருளைத் தனது என்னும் மகாரத்தைப் போக்க அகங்காரம் மமகாரம் போக உயிர்க்கு முத்தி சித்திக்கின்றது. "யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த வுலகம் புகும்" என்பது திருவள்ளுவர் பொய்யாமொழி யன்றோ? இறைக்குள்ள வடிவங்கள் மூன்று. ஒன்று இலிங்க வடிவம்; ஒன்று குருவடிவம்; மற்றொன்றோ சங்கம வடிவம். மூன்றையும் குருலிங்க சங்கமம் என்று சொல்வது நூல் வழக்கும் உலக வழக்கும் ஆம். இம்முறை காரணத்தோடு கூடியதே. குருஇல்லையேல் இலிங்கத்தின் பெருமையும் அடியாருயர்வுந் தோன்றா. ஆதலின் குருவை முதலில் வைத்தனர். குரு என்பதன் பொருள்களுள் சிறந்தவை மூன்று. ஒன்று “கவுரமாயிருத்தலினாற் சிவாசாரியர்க்குக் குரு என்னும் இப்பெயர் எய்திற்று" இது லிங்கபுராணம் உத்தரகாண்டம் இருபதாவது அத்தியாம் 19-ஆம் சுலோகத்திற் கண்டது. மற்றொன்றுகு எனும் அஞ்ஞானத்தைப் போக்கிரு எனும் ஞானத்தைத் தருபவன் என்பது. "குகரம் அந்தகாரம். ருகரம்