பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

199

ஒளியாம். அதனால் குலவும் இருளோட்டியொளி கொடுப்பதுவே குருவாம்” (வீரசிங்காதன புராணம் வீரபத்திரச் சுருக்கம் 158ஆம் செய்யுள்) இன்னொன்று சம்ஸ்கிருத வாக்கியத்தாலும் பிராகிருத வாக்கியத்தாலும் தேவபாஷை முதலிய உபாயங்களாலும் சிஷ்யர்களறிவைத் தெரிந்து போதிக்கிறவனே குரு என்பது. இப்பொருள் வட மொழிச் சிவதருமோத்திரம் எனும் உபாகமத்திற் கண்டது.

குருவின் பெருமையுள் சில : “உயர்ந்த பக்தி எப்படி ஈசுவரன் மீது அப்படி குருவின் மீது“ - சுவேதாசுவதரம் ஆறாம் அத்தியாயம் “இஷ்டம் சித்தித்தற் பொருட்டுக் குருவைத் தியானிக்குக - தக்ஷிணாமூர்த்தியுபநிஷத். ‘பக்தியொடு தன் குருவை வணங்கி“ - கைவல்யோபநிஷத். “குருவினுரு வங்குறித்த அப்போதே திரிமலந் தீர்ந்து சிவனவனாமே“ - திருமந்திரம். “சிவனென யானுந் தேறினன் காண்க“ - திருவாசகம். “மன்னுமருட் குருவாகி வந்தவரினிக்கி, மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்“ - சித்தியார். “எட்டுதற்கரிய சற்குரு அருளால் இயம்புமோர் மொழியினைப் பெற்றே, நிட்டை சாதித்தே சகல கேவலங்கள் நீங்கிடிற் பிறப் பிறப்பறுமே” - நிஷ்டாநுபூதி. வேதாகமங்களின் முடிவிலுண் டாகும் ஐயத்தை அகற்றுபவன் குரு; இருட்பிணி அவிப்பவன் குரு; தன்னை உணர்த்துபவன் குரு; தலைவனை உணர்த்துபவன் குரு; இயமமாதிகளை வருவிப்பவன் குரு; பேரின்பத்தை யடைவிப்பவன் குரு. ஏனைய வடிவங்களினும் குருவடிவஞ் சிறந்தது. அடிமை என்று தன்னையறியாது தான்கொண்ட உடம்பே மேல் எனக்கருதுபவர்க்கு அமுதும் நீருந்தந்து பசி தாகங்களைப்போக்கித், தன்னை அடிமை என்று கருதினவர்கட்குப் பசி தாகங்களைப் போக்குவதேயன்றிச் சாத்திரோபதேசத்தால் இறைவனது இருவகை யிலக்கணங்களையும் உணர்த்திச் சாதனை வகையால் அநுபவத்திலிருத்திக் குரு மூர்த்தியிருக்கும்இடமே மடம் எனப் பெயர்பெறும். இங்ஙனம் கூறுவது காமிகாகமம். மடம் - முனிவாசப் பேர் என்பது மண்டல புருடோத்தமன் நிகண்டு.

இவ்வித மடங்களில் வசிக்குங் குரு மூர்த்திகள், வழிபாடு செய்து, தம் அடியார்களை வழிப்படுத்தத் தாம் வசிக்கும் மடத்தோடு ஆலயங்களை அமைத்தனர். அதனால் மடாலயம் எனும் வழக்கம் வந்தது முற்காலத்தில். “மடம் பெற்றபேறு திருக்கோயிற் கில்லையிம் மாநிலத்தே" என்பது பழைய