பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

வல்லிக்கண்ணன்

பாட்டு. வடநாட்டிலும் தெனாட்டிலும் பல ஆயிர ஆண்டுகளாக மடாலயங்கள் உண்டு. இம் மடாலயங்களுள் ஒன்றே இந்த ஞானியார் மடாலயம். இத் தென்னடாம் தமிழ்நாட்டில் அடியார் பலர் சமய உணர்ச்சியிற் சிறந்து முத்தியடையதற்குச் சற்குருவை அடைந்து ஞானோ பாய சாதனங்களை அறிந்து சாதித்துப் பதமுத்தியையும் பரமுத்தியையும் அடைந்துவந்தனர். சுமார் 300 ஆண்டுகளின் முன்னர் அடியார் பலர் ஞானாசாரியர் இல்லாது தவித்தனர். அக்காலத்து முருகப்பிரான் திருவருளால் திருக்கோவலூரில் கலி 4774-ஆம் ஆநந்த௵ கார்த்திகை மாதம் கிருத்திகைத் திருநாளில் அருணையில் தீபம் விளங்குந்தருணம் குருமூர்த்தி அவதரித்தனர். இம்மூர்த்திகளே இம்மடாலய முதல் குருபரர். ஞானோபதேசம் செய்யவே அவதரித்தமையின் “ஞானியார்” எனச் சிறப்பாகச் சொல்லப்பெற்றனர். அம்மூர்த்திகள் வழிவழி வந்த எங்களிடத்தில் மெய்யன்பு நிறைந்த அறிஞர்பலர் இம்மடாலய ஆசாரிய சம்பந்தம் எங்கட்குக்கிடைத்து ஐம்பதாண்டு நிறைந்தமையை யுணர்ந்து பொன் விழாக் கொண்டாட முயன்று இன்றையதினம் செவ்வையாக நடத்துகின்றனர். அவ்வன்பர்கட்கு யாங்கள் செய்வது என்? குன்றுதோறமர்ந்து எங்கள் உள்ளத்திலும் குடிகொள் குமரவேளையும் அப் பெருமான் இருபாங்கரும் அமர் அன்னைமாரையும் குருமூர்த்திகளையும் எண்ணித், துதித்து, வணங்கி இவ்விழாவில் மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் முயன்று, பொருளையும் தந்து, கொண்டாடும் அன்பர் பலரும் அவர் தம்மைச் சார்ந்தாரும் வேண்டுவன பெற்று இன்புறச் செயல் வேண்டுமெனத் துதிக்கின்றோம். மெய்யன்பர்கள் பலரும் நன்று வாழ்குக. பல் ஆண்டு இன்பத்துடன் வாழ்குக அவர் தம்மைச் சார்ந்தாரும் . உலகம் வாழ்குக.

சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க.