பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

27

கண்களாக இருந்தன. ஊர்தோறும் சென்று சைவம் பரப்பியவர் தமிழை வளர்த்தவர். எப்போதும் பிறர்க்கு நல்ல போதனையே செய்வார். செல்வர் - வறியர் - உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாராமல் இனமொழி வேற்றுகளைக் கடந்த தவயோகி.

ஞானியாரடிகளுடைய திருவோலக்கப் பொலிவினை தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனாரின் எழுத்துக்களின் வடிவில் காண்பது மிகப்பொருத்தமாகும்.

முருகன் சேவடி வருடியுருகும் ஈரநெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மைபொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறுதுதையும் நெற்றியும் மாணிக்கக் குழை பிறங்கும் செவியும், பொன்னொளிரும் மணிமார்பும், கருமைக் கதிர்விருக்கும் திருமேனியும் சண்முகாஎன்று நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளாரின் திருவோலக்கப் பொலிவு என் உள்ளத்தில் ஓவியமெனப்படிந்து நிற்கின்றது. அஃது எவர் உள்ளத்தையும் கவரும். எவர்க்கும் எளிதில் இன்பமூட்டும். திரு.வி.க. பொன்மொழிகள்.

மற்றும் குடவாயில் வித்துவான் மு. இரத்தினதேசிகர் சென்னை ராவ்சாகிப் டிப்டி கலைக்டர் கே. கோதண்டபாணி பிள்ளை ஆகியவர்களின் திருவுருவு வருணைகள் மிகச்சிறப் பானவை.

இந்நூலின் 100,101 பக்கங்களில் இவைகளைக் காணலாம்.

திரு. கல்கி ஆசிரியர் நா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) 1939 நவம்பரில் ஆனந்தவிகடனில் எழுதியது.

ஞானம்- மெய்ஞ் ஞானம்-துவராடை தாங்கிய மேனிஅங்க இலிங்கம் - தாழ்வடங்களின் தனியிடம் திருநீற்றின் பொலிவு, தமிழ் மணம் கமழும் புன்முறுவல் இதோ தோன்றுகிறது. (கல்கி, ஆனந்தவிகடனில் புகழ் மாலை)

சுவாமிகளோடு அவர்காலத்தில் வாழ்ந்த பேரறிஞர் பலர் தொடர்பு கொண்டு பேறு பெற்றனர்.

அவர்கள் சர்.பி.டி.ராசன், பெரியார் ஈ.வே. இராமசாமி நாயகர் திரு.டி.எம். நாராயணசாமி பிள்ளை, யாழ்பாணம், திரு. நடேசப்பிள்ளை ஆவார்கள். மற்ற அறிஞர்களின் பெயர்கள் முன்பே காட்டப்பட்டுள்ளன.