பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

63

பிறக்கும். ஆனால் அதே பாட்டை அவர்கள் இரண்டாம் முறை, “உயர்ந்த திருப்போரூரா என்றே நான் ஈடேறுவேன்“ என்று பாடும்போது “திருப்போரூரா என்று சொல்லிக் கொண்டே நான் கடைத்தேறி விடுவேன்“ என்ற பொருள் பிறக்கும்.

சுவாமிகள் பிரசங்கங்கள் நீண்ட நேரம் நடக்குமென்று குறிப்பிட்டேன். கேட்டோரில் பலர் சென்னை போன்ற நகரங்களில் வேலைகளில் ஈடுபட்டிருந்து சற்று நேரங்கழித்து வருதல் கூடும். வருவோர் அனைவரையும் சுவாமிகள் நேர்முகமாய் அறிந்திருப்பார்கள், ஆதலால், வருவோர் யாராயிருப்பினும், தாம் சுவாமிகளைப் பார்த்து வணக்கம் செலுத்தினாலொழிய, அவருக்குப் பிரசங்க நேரத்தில் மனம் நிம்மதி பெறாது. பிரசங்கம் நடந்து கொண்டேயிருக்கும். சுவாமிகள் வாயிலிருந்து வரும் சொற்பிரவாகம் யாருக்காகவும் தடைப்படாது. ஆனால் வந்து வணங்குபவரை வரவேற்பதில் குறை வொன்றுமிராது. ஒருவருக்குப் புன்னகை, ஒருவருக்குத் தலையசைவு, ஒரு வருக்குத் திருநீறு, ஒருவருக்குக் கண்ணினாலேயே வரவேற்பு இவ்விதம், யாரும் எந்தக் குறையும் இன்றித் திருப்தியாகத் தம்மையும் ஞானியார் சுவாமிகள் பார்த்து வரவேற்றார் என்றே மகிழ்வார்கள்.

சுவாமிகள் இந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்துங்கூட, எப்போதும் எங்கு செல்வதாயினும், பல்லக்கில் தான் செல்வார்கள். சென்னைக்கு வருவதும், போவதும், சென்னையில் பல இடங்களுக்குப் போவதும் எல்லாம் பல்லக்கில்தான்.

எழுமூரில் ஒரு சம்யம் அவர்கள் தங்கியிருந்த பொழுது மாம்பலத்தில் அவர்களுக்குச் சிறப்பாக ஓர் ஊர்வலம் செய்வித்தோம். அனேக தெருக்களில் அவர்களைப் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, அவர்களுடைய அன்பர்கள் உள்ள இடங்களில் அவர்களுக்கு வணக்கமும் வழிபாடும் செய்வித்துப் பின் அவர்கள் இருக்கையில் சேர்ப்பித்தோம். அவ்வாறு செல்லும்போது மாம்பலத்தில் சாம்பசிவம் தெருவில் உள்ள எனது இருக்கைக்கும் ஊர்வலம் வந்தது. அங்கு நிறுத்தி அவர்களுக்கு வீட்டிலுள்ளார் அனைவரும் நமஸ்காரம் செய்து விபூதி பெற்றுக் கொண்டோம். அப்போது எனது குழந்தை மணிமேகலை, தூரத்தில் நின்றது ஓடிவந்தது. குழந்தைக்கு ஊர்வலம் வேடிக்கையான ஒரு காட்சியேயன்றி, ஊர்வலத்திற்குத் தலைவரான சுவாமிகளை வணங்க வேண்டுமென்ற