பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வல்லிக்கண்ணன்

மகிழ்ந்தனர். குழந்தைக்குப் ‘பழநியாண்டி' எனப் பெயர் சூட்டினர். பழநியுறை பரமகுரு அவர்களுக்கு வழிபடு கடவுள். எனவே அப்பெயரைத் தம் அருமைத் திருக்குமாரருக் கிட்டமை வியப்பன்று.

அண்ணாமலைக்கும் - பார்வதிக்கும் பிள்ளை பழநியாண்டி, என்ன பெயரொற்றுமை !

வீரசைவர், தம் மரபுக்குரிய முறைப்படியே, பிள்ளைப் பருவச் சடங்குகளை யெல்லாம் நிறைவேற்றிச் சிவலிங்க தாரணையும் செய்து வைத்துவிடல் வேண்டும். அவ்வாறே தம் குழந்தைக்குச் செய்ய வேண்டிய முறைப்படியாவும் செய்து, தம் குருவாகிய திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்துச் சுவாமிகளிடம் சிவலிங்க தாரணம் செய்து வைக்க ஆறாம் மாதத்தில் குருவினிடம் குழந்தையைக் கொண்டு வந்தனர்.

அப்போது, திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் நான்காங் குருமூர்த்திகளான ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் எழுந்தருளியி ருந்தார்கள். சிவத்திரு அண்ணாமலை ஐயர், குருநாதரிடம் அன்பு பூண்டு அவ்வப்போது திருப்பாதிரிப்புலியூர் வந்து குருநாதர் திருவருள் பெற்றுச் செல்வதுண்டு. அவ்வாறு ஒருமுறை வந்த போது, ‘உங்கள் குழந்தை பழநியாண்டி, இனி எமக்குரிய பிள்ளை. அப்பிள்ளையை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிடுக’ என்ற ஆணையும் பிறந்திருந்தது குருவாக்கினை வேத வாக்காகக் கொண்டு யாவரும் போற்றிவந்த காலம் அது. அதிலும், வீரசைவ மரபில், குருவே சிவனெக் கூறினன் நந்தி என்ற திருமந்திர வாக்கு மிகமிகத் தீவிரமாகப் பின்பற்றப் பெறுகிறது. ஆகவே, அண்ணாமலை ஐயர்- பார்வதியம்மை இருவரும், தம் செல்வத் திருக்குமரனைக் குருபாதத்தில் சேர்ப்பித்தார்கள். பழநியாண்டிக்கு இவ்வுலகில் தோன்றிய ஆறாம் மாதமே குருநாதன் திருவடி தொழும் பேறு கிடைத்துவிட்டது.

"பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம், காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்" என்பது அம்மையார் திருவாக்கு. அங்ஙனமே, நம் குருநாதர் பிறந்து, தம் முன் எதிர்ப்பட்டோரை அடையாளங் கண்டுகொள்ளும் வயதெல்லை யிலேயே குரு சீர்பாத சேவை கிடைத்துவிட்டது. அன்று முதல், திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தையே தமக்கிருப்பிட மாகவும், தாயும் தந்தையும் குருவும் தெய்வமும் குரு நாதராகவும் கண்டு