பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தில்லைத் திருக்கோவில்

97


சிகரத்தில் உள்ள பொன்னேடுகள் ஒவ்வொன்றிலும் ‘சிவாயநம’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை எழுதி வேய்ந்திருப்பதாகத் தில்லையுலாக் கூறுகின்றது. இப் பகுதியில்தான் சிதம்பர இரகசியம் அமைந்துள்ளது. இறைவன் வான் வடிவில் விளங்கும் உண்மையைப் புலப்படுத்த, மந்திர வடிவில் திருவம்பலச் சக்கரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றிப் பொன்ற்ை செய்த வில்வமாலையொன்று விளங்குவதைக் காணலாம்.

சிற்றம்பலத்தின் சிறப்பு

மேலும் இச் சிற்றம்பலத்தில் இறைவன் உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூவகைத் தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளான். கூத்தப்பெருமான் திருமேனி உருவம் ஆகும்; இரகசியம் அருவமாகும்; படிக இலிங்கமாகிய அழகிய சிற்றம்பலமுடையார் அருவுருவ மாகும். இங்கு இரத்தின சபாபதியும் சுவர்ணகால பைரவரும் காட்சியளிக்கின்றனர்.

பொன்னம்பலத்தின் பொலிவு

கனகசபையாகிய பொன்னம்பலம், சிற்றம்பலத் திற்கு எதிரே அமைந்த பேரம்பலமாகும். இதில்தான் பெருமானுக்கு எப்போதும் திருமுழுக்குச் சிறப்புக்கள் நடைபெறும். தேவசபையில் உற்சவ மூர்த்திகள் எழுங்தருளியுள்ளனர். இதனை அநபாய சோழன் பொன்னல் மெழுகிப் பொன்மயமாக்கினன் என்று பெரியபுராணம் பேசுகிறது.

நிருத்த சபை

நிருத்த சபை என்பது தேர் அம்பலமாகும். இது கூத்தப்பெருமான் திருமுன்னர்க்கொடிமரத்தின் தென்

த. வ. ந.-7