பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழ் வளர்த்த நகரங்கள்


தில்லையில் இரட்டையர்

அறுநூறு ஆண்டுகட்கு முற்பட்டவராகிய இரட்டைப் புலவர்கள் இருவரும் தில்லையடைந்தனர். அவர்கள் கூத்தப்பெருமானைத் தலைவகைக் கொண்டு ‘தில்லைக் கலம்பகம்’ என்ற நூலைப் பாடினார். பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளனர்.

தில்லையில் குமரகுருபரர்

முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டவராகிய குமர குருபரர் தில்லைக்கு ஒருகால் வந்தார். அப்போது தில்லை யிலிருந்த புலவர் சில்லோர், ‘இவர் இலக்கணமறியா தவர் ; யாப்பிலக்கணம் கற்காமலே செய்யுள் யாக் கின்றவர்’ என்று இகழ்ந்தனர். அதனையறிந்த குமர குருபரர் யாப்பிலக்கண நுட்பங்களெல்லாம் புலப் படுமாறு ‘சிதம்பரச் செய்யுட் கோவை’ யென்னும் சிறந்த நூலைப் பாடினர். பின்னர்ச் சிதம்பர மும் மணிக்கோவை, தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை ஆகிய நூல்களையும் தில்லையில் இருந்த பொழுதே பாடினார்.

தில்லையில் படிக்காசர்

ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகட்கு முற் பட்ட படிக்காசுப்புலவர் தில்லையை அடைந்து பொன்னம்பலத்தில் அமர்ந்த சிவகாமியன்னையிடம், “எனக்கு ஏதேனும் கொடு; உன்னைப் பாடியவர்க்கும் பாடாத பிறர்க்கும் ஏதேதோ அளித்தாய் என்று கூறுகின்றனர்: எனக்கு ஏதும் கொடுத்திலேயே ?” என்று வேண்டிப் பாடினார். உடனே சிவகாமியன்னை பஞ்சர்க்கரப் படியில் ஒரு பொற்காசினை வைத்து, அதனை எடுத்துக்கொள்ளுமாறு பணித்தாள். ‘அதனா