பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த தில்லை

117


திரங்கள் எட்டினை அருளிய உமாபதிசிவனார் உறைந்து, தமிழும் சமயமும் வளர்த்ததலமாகும். திருவேட்களம் திருவருட்செல்வர்களாகிய அப்பரும் ஞானசம்பந்தரும் தங்கியிருந்து பண்ணாரும் இன்னிசைப் பாமாலை தொடுத்த தூயதலமாகும். இத்தகைய ஞானங்கமழும் பூமியில் அமைக்கப்பெற்ற பல்கலைக்கழகம், தமிழகத்திற்கே தனிச்சிறப்பை அளிப்பதாகும். நாலாயிரம் மாணவர்கட்கு மேல் தங்கியிருந்து பல துறைக் கலைகளையும் பயிலும் இடம் பாரதநாட்டிலேயே இஃதொன்றுதான்.

பல்கலைக்கழகத்தில் பைந்தமிழறிஞர்கள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மிகச் சிறப்புவாய்ந்தது. தமிழகத்தில் பெரும்புலவர்களெனப் பெயர்பெற்ற பேரறிஞர்கள் பலரும் இத்துறையில் பணிசெய்தனர்; இன்றும் பணியாற்றுகின்றனர். டாக்டர் உ. வே. சாமிநாதையருக்குப் பின், நெல்லை நாட்டின் நல்லறிஞராக விளங்கிய கா. சுப்பிரமணியபிள்ளை, டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார், மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், மகாவித்துவான் ரா. இரா கவையங்கார், நாவலர் ந. மு. வேங்கடசாமிநாட்டார், ஒளவை சு. துரைசாமிபிள்ளை, டாக்டர் அ. சிதம்பர நாதன்செட்டியார் முதலான பல தமிழ்ப்பேரறிஞர்கள் இருந்து தமிழ்ப்பணியாற்றினர். இன்று தமிழகத்தில் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தமிழ்ப்பணியாற்றும் பன்னூறு புலவர்கள், இப்பல்கலைக்கழகம் தந்த செல்வங்களே. இன்றும் இத்துறையினைத் திறம்பட நடாத்தி வருவோர் பேராசிரியர் தெ. பொ. மீனட்சி சுந்தரனாரும் பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன்