பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந் நூலாசிரியரின் பிற கழக வெளியீடுகள் கோப்பெருந் தேவியர்

மங்கையர் உலகத்திற்கு மாண்புமிக்க கல்வழி காட்டும் திறத்தினராய் அமைந்து, மன்னர் கோப்பெருக்தேவியராய் வாழ்ந்த எண்மர் வரலாற்றை எடுத்துரைப்பது இது. இள மாணவ் மாணவியர் கற்றுப் பயன் அடையவேண்டும் என்ற நன்னுேக்கால் எளிய - இனிய-செந்தமிழ் உரைகடையில் எழுதப்பட்ட நால். விலை ரூ. 1-50

காவியம் செய்த மூவர்

சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம் ஆகிய முப்பெருங் காவியங்களை முறையே இயற்றித் தந்த இளங்கோ வடிகள், கூலவாணிகன் சாத்தனர், சேக்கிழார் என்னும் பெரு மக்களின் வரலாற்றையும் அவர்கள் செய்த காவியச் சிறப்பையும் மாணவரும் மற்றவரும் எளிதில் தெளிவாக உணரும் வகையில் எழுதப்பட்ட இந்நூல். விலை ரூ. 1,50, இலக்கிய அமைச்சர்கள்

அமைச்சர்கள் அன்றும் வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்ற னர். காம் பின்னவர்களை அறிந்த அளவுக்கு முன்னவர்களே அறியோம். அவர்கள் அரசியலில் மட்டுமின்றி இலக்கியம், சமயம் ஆகிய துறைகளிலும் வல்லுநராய்த் திகழ்ந்தனர். அத் தகையோரைத்தாம் இலக்கிய அமைச்சர்களாய் உருப்படுத்திக் காட்டுகிறார் இங் நூலாசிரியர். அங்த அமைச்சர்கள் யாவர் என்பதைப் படித்தின்புற வேண்டியது தமிழர் கடன். சிறப்பாக மாணவர்களும் ஆசிரியர்களும் இதனைக் கற்றல் வேண்டும். பள்ளிகளில் பாடப்புத்தகமாக வைத்தற்கு ஏற்ற நூல்.

), 1-50. வள்ளலார் யார்?

செந்தமிழ் மொழியைத் தெய்வமணங் கமழுமாறு செய்த பெருமை பலருக்குண்டு. அவர்களுள் அருட்டிறம் வாய்ந்த இராமலிங்க அடிகளார் அழகு தமிழில், எளிய கடையில், உயர்ந்த கருத்துக்கள் பொதிந்த திருப்பாடல்கள் பலவற்றைப் பாடியவர் என்பது யாவருமறிந்ததே. அவர்தம் பாடல்களின் தொகுப்பு அருட்பா என்று அழைக்கப்பெற்று வரும் அருமையும் பெருமையுமுடையது. அக்த அருட்பாவின் பிழிவினைக் கட்டுரை களாக்கி இந் நூலில்-தங்துள்ளார் ஆசிரியர். தித்திக்கும் தெள் ளமுதனேய படைப்பு. விலே, ரூ. 1-50.

-o-o-o-o