பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தமிழ் வளர்த்த நகரங்கள்


கடை வீதியும், கூலங் குவித்த கூல வீதியும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்களாகிய நால்வகை மக்களும் வாழும் நல்வீதிகளும், ஆவண வீதியும், பரத்தையர் வீதியும் அணியணியாக அமைந்திருக்தன. வீதிகளில் வேனிற்கால வெப்பினை யகற்றுவதற்காக வானளாவிய பந்தர்கள் போடப்பட்டிருந்தன. சந்தியும் சதுக்கமும் மன்றமும் கவலையும் ஆங்காங்கே காணப் பெற்றன.

நகருள்ளே சிவபிரான் திருக்கோவிலும், திருமால் கோவிலும், பலராமன் கோவிலும், முருகன் கோவிலும், இந்திரன் கோவிலும் இருந்தன. இன்றுள்ள அங்கயற் கண்ணி திருக்கோவிலும் கூடலழகர் திருக்கோவிலும் அன்று விளங்கினவல்ல. அவை பிற்காலம் தோன்றி யவை. இங்கே காமனுக்குத் திருவிழா நடந்தது.

பரஞ்சோதியார் காட்டும் மதுரை

தமிழகத்தின் பழமையான சமயமாகிய சைவத் தின் தெய்வ மாண்பைத் தெரிக்கும் புராணங்கள் பல். அவற்றுள் தலையாய புராணங்கள் மூன்று. அவை பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் என்பன. திருவிளையாடற் புராணத்தைச் சிவபெருமானின் இடக்கண் என்று சைவர் போற் றுவர். மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள் ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் அங்ககரில் அறுபத்து நான்கு அருள் விளையாட்டுக்கள் செய்தருளினான். அச் செய்திகளைக் கற்பனை கலங்கள் கனியுமாறும், பத்திச்சுவை பெருகுமாறும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் என்னும் அருள் நூலாக ஆக்கித் தந்தார். அந் நூலிற் போற்றப்படும்